அலுவலகம் செல்ல வேண்டாம்.. வீட்டில் இருந்தே இன்டர்ன்ஷிப் பணி.. மாணவ-மாணவிகளை அழைக்கும் மைக்ரோசாப்ட்
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடைசி ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வாகும் நபர்கள் Remote முறையில் அலுவலகம் செல்லாமல் பணியாற்றலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டிலும் பெங்களூரிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து பல்வேறு பணிகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கு இன்டர்ன்ஷிப் வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு இளநிலை அல்லது முதுநிலை இன்ஜினியரிங் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படித்து வருபவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் கடைசி ஆண்டு படிப்பை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி Object Oriented language-ன் ஓராண்டு புரோகிராமிங் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இன்டர்ன்ஷிப்பின்போது இன்ஜினியரிங் பிரின்சிபில்களை பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க வேண்டி இருக்கும். அதேபோல் புதிய இன்ஜினியரிங் மெத்தட்களை கற்று பணியில் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதேபோல் ஒன்றாக சேர்ந்து சாப்ட்வேர் புராஜெக்ட்டுகளை வேகமாக முடிப்பதற்கு உதவி செய்ய வேண்டி இருக்கும்.
இந்த இன்டர்ன்ஷிப் என்பது Remote முறையை அடிப்படையாக கொண்டது. இதனால் அலுவலகம் செல்லாமல் கூட பணி செய்ய முடியும். இருப்பினும் தற்போதைய அறிவிப்பின்படி இன்டர்ன்ஷிப்பிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உள்ளிட்டவை பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வாகும்போது அதுபற்றி தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த இன்டர்ன்ஷிப் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications