‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரும் நல்ல வாய்ப்பு
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யும் வகையில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டுக்கு இந்தியாவிலும் முக்கிய நிறுவனங்களில் கிளைகள் உள்ளன.

பெங்களூர், ஹைதராபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முடித்தவர்கள் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு சி, சி++, கோடிங் லேங்குவேஜில் 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்பிங்கில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்டோஸ் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றியும், Distributed systems மற்றும் ஸ்ட்ரோஜ் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் என்பது மாறுபடலாம்.
இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 17 ம் தேதி வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மைக்ரோசாஃப்ட் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ், படிப்புக்கான தவி, கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய கால விடுமுறை உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி 100 சதவீதம் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications