‛‛50% வீட்டில் இருந்து பணி’’.. சாப்ட்வேர் இன்ஜினியர் வேலைவாய்ப்பு.. மைக்ரோசாஃப்ட்டின் சூப்பர் ஆஃபர்
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 50 சதவீதம் வரை வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டுக்கு இந்தியாவிலும் முக்கிய நிறுவனங்களில் கிளைகள் உள்ளன.

பெங்களூர், ஹைதராபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பிஏ/பிஎஸ் அல்லது எம்எஸ்-ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். கோடிங் லேங்குவேஜ்களான C#, C++ or Go, Python உள்ளிட்டவற்றில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Building, Shipping, Operation Reliable, distributed solution உள்ளிட்டவற்றில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் டெக்னிக்கல் அறிவு, பிரச்சனையை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
லினக்ஸ் பற்றி தெரிந்திருப்பதோடு, ஓபன் சோர்ஸ் ப்ரோஜெக்ட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Docker மற்றும் DevOps toolsகளான Kubernetes, DC/OS, Docker swam உள்ளிட்டவற்றில் பணியாற்றி இருக்க வேண்டும். அதேபோல் Azure or AWs, Azure Portal உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின் பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் என்பது மாறுபடலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதரபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் 50 சதவீதம் வரை வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 26 ம் தேதி வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மைக்ரோசாஃப்ட் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications