வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. அழைக்கும் மைக்ரோசாஃப்ட்!
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள மைக்ரோசாஃப்ட்டில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விரைவாக விண்ணப்பம் செய்யலாம்.
மைக்ரோசாஃப்ட.. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ளன.

இந்நிலையில் தான் கோவா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையிலான பணி குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் டெக்னிக்கல் ப்ரோகிராம் மேனேஜர் II (Technical Program Manager II) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அடிப்படை தகுதி என்பது இளநிலை படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான துறையில் முடித்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அதற்கு நிகராக ஐடி துறையில் பணியாற்றி இருக்க வேண்டும். 4க்கும் அதிகமான ஆண்டுகளில் டெக்னிக்கல் ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அல்லது கஸ்டமர் - பார்ட்னர்ஸ் உடனான ப்ராடெக்ட் டெவலப்மென்ட் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் AI டெக்னிக்ஸ் மற்றுமு் டூல்ஸ் பிரிவில் 2 ஆண்டு பிராக்டிக்கல் அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் விருப்ப தகுதியாக எல்எல்எம் உள்ளிட்டவற்றில் OpenAI, Azure AI, Azure ML அல்லது அதற்கு நிகரானவற்ில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், டெக்னிக்கல், ப்ராடெக்ட்ஸ், பிசினஸ் சேலஞ்ச்களை எதிர்கொள்ளும் துணிவு இருக்க வேண்டும். ஸ்டார்ங் கஸ்டமர் ஃபோக்கஸ் இருக்க வேண்டும். மேலும் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பற்றி டெக்னிக்கல் ரீதியிலான புரிதல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் என்பது மாறுபடலாம். சம்பளம் குறித்த விபரங்கள் நேர்க்காணலின்போது தெரிவிக்கப்படலாம்.
இந்த பணி என்பது Remote முறையிலானது. இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உடனடியாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications