வொர்க் ப்ரம் ஹோம்‛.. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளம்! மைக்ரோசாஃப்ட் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு
சென்னை: பிரபலமான மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் இருக்கும். தற்போது பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவ கையில் உலகில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட்டும் (Microsoft) ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது வெளியாகி உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை, முதுகலை பிரிவில் டிகிரி அல்லது என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டெக்னீக்கல் என்ஜினீயரிங் பிரிவில் சி, சி++, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் கோடிங் லேங்குவேசுடன் ஓராண்டுக்கு மேலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி NoSQL Database-ல் மாங்கோடிபி (MongoDB), கேசன்ட்ரா (Cassandra), ரெடிஸ் (Redis)-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ரெஸ்ட்ஃபுல் ஏபிஐஎஸ், மைக்ரோசர்வீசஸ், டிஸ்ட்ரிபூட்டட் சிஸ்டம்ஸ், டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், சிஸ்டம்ஸ் ப்ரோகிராமிங், நெட்வொர்க்கிங் தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதை அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்தது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். ஆண்டு சம்பளமாக அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications