கைநிறைய சம்பளம்.. டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களே வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.. அழைக்கும் மிதானி
சென்னை: மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மிதானி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் மிதானி எனும் மிஸ்ரா தாட்டு நிகம் லிமிடெட் (Misra Dhatu Nigam Limited or Midhani) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ராணுவத்துக்கு தேவையான உலோகங்கள் (Metals)மற்றும் உலோக கலவைகள் (Metal Alloy) தயாரித்து வழங்கி வருகிறது.

அதோடு இந்தியாவில் டைட்டானியம் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாக இது விளங்கி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் தான் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: மிதானி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பணிக்கு Metallurgy பிரிவுக்கு 9 பேர், மெக்கானிக்கல் பிரிவுக்கு 4 பேர், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு ஒருவர், பிட்டர் (Fitter), வெல்டர், டெக்னீசியன் பிரிவுக்கு தலா 2 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: அசிஸ்டென்ட் பிரிவில் Metallurgy, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட துறையில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். பிட்டர், வெல்டர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதற்கான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: Metallurgy, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30,490 சம்பளமாக வழங்கப்படும். பிட்டர், வெல்டர், டெக்னீசியன் பிரிவில் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27,840 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: பிட்டர், வெல்டர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் ஓராண்டு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு தகுதியின் அடிப்படையில் 3 ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 9 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். இந்த வேளையில் திறனறி தேர்வு நடத்தப்படும். அதன்படி அசிஸ்டென்ட் (Metallurgy) நேர்க்காணல் அக்டோபர் 9 ம் தேதி, அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) நேர்க்காணல் அக்டோபர் 10ம் தேதியும், அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) நேர்க்காணல் அக்டோபர் 11ம் தேதியும் நடக்கிறது.
நேர்க்காணல்: அசிஸ்டென்ட் (பிட்டர்) பணிக்கான நேர்க்காணல் அக்டோபர் 12ம் தேதி, அசிஸ்டென்ட் (வெல்டர்) பணிக்கான நேர்க்காணல் அக்டோபர் 13ம் தேதி, அசிஸ்டென்ட் (டெக்னீசியன்) பணிக்கான நேர்க்காணல் அக்டோபர் 16ம் தேதியும் நடைபெற உள்ளது. நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது MIDHANI Corporate Office, Kanchanbagh, Hyderabad முகவரியில் காலை 8 மணி முதல் காலை 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. நேர்க்காணலில் பங்கேற்போர் பயோடேட்டோ, படிப்பு சான்று உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
மிதானி அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications