Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு வங்கியில் வேலை.. மாதம் ரூ.32 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சிருக்கீங்களா? தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி வெளியிட்ட இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு நாடு முழுவதும் உள்ளது. ஊரக பகுதிகளில் விவசாய மேம்பாட்டுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த வங்கியில் காலியாக உள்ள 162 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி பார்க்கலாம்.

NABARD Recruitment 2026 162 Development Assistant Vacancies Announced

பணியிடங்கள் விவரம்:

டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (குரூப் பி) - 159 பணியிடங்கள்
டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (இந்தி) - 03

மண்டல அலுவலக வாரியான காலியிடங்கள்:

அந்தமான் மற்றும் நிக்கோபார் - 01, ஆந்திரா - 07, அஸ்ஸாம் - 05, பீகார் - 01, சத்தீஸ்கர் - 05, கோவா - 01, குஜராத் - 09, ஹரியானா - 03, இமாச்சலப் பிரதேசம் - 04, ஜம்மு காஷ்மீர் - 03.ஜார்க்கண்ட் - 01, கர்நாடகா - 07, கேரளா - 03, லடாக் - 02, மத்தியப் பிரதேசம் - 10, மகாராஷ்டிரா (மும்பை தலைமை அலுவலகம் உட்பட) - 48, மணிப்பூர் - 02, மேகாலயா - 01, புது டெல்லி - 03, ஒடிசா - 08, பஞ்சாப் - 02.ராஜஸ்தான் - 05, தமிழ்நாடு - 09, உத்தரப் பிரதேசம் - 11, மேற்கு வங்கம் - 08 ஆகிய மாநிலங்களுக்கு வளர்ச்சி உதவியாளர்கள் தேவை. இந்தி மொழி வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் ஆந்திரப் பிரதேசம் - 01, மகாராஷ்டிரா (மும்பை தலைமை அலுவலகம்) - 01, தமிழ்நாடு - 01 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும், SC/ST/PWBD மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (இந்தி) (குரூப் 'பி') பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் ஆங்கிலம்/இந்தி வழியில் இளங்கலைப் பட்டம் பெற்று, இந்தி மற்றும் ஆங்கிலத்தை கட்டாய/விருப்பப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். இதில் பொது பிரிவினர் 50% மதிப்பெண்களும், SC/ST/PWBD/EXS பிரிவினர் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும், இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது 21 முதல் 35 வருடங்களுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வயது சலுகை அளிக்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்:

இரு பதவிகளுக்கும் தோராயமாக மாதம் ரூ.32,000/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு (Language Proficiency Test) ஆகிய 3 தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் முதன்மைத் தேர்வு மையங்கள்:

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் முதன்மைத் தேர்வுகள் நடைபெறும். மெயின்ஸ் தேர்வு தமிழகத்தில் சென்னை நகரில் மட்டுமே முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி/எஸ்டி முன்னாள் ராணுவ வீரர்கள்/PWD பிரிவினருக்கு ரூ.100/- கட்டணமாக வசூலிக்கப்படும். இதர பிரிவினருக்கான கட்டணம் ரூ.550/- ஆகும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், நபாா்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nabard.org/ க்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணபிக்க வரும் 03.02.2026 அன்று கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1701263549Final%20Advertisement%20DA,DA(H)%20-%202026.pdf?csrt=62392037523909908

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+