நோ எக்ஸாம்! இன்டர்வியூ மட்டுமே.. மாதஊதியம் ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை! அழைக்கும் என்ஏஎல்சிஓ
சென்னை: தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் காலியாக உள்ள 277 பணியிடங்களை நிரப்பப்பபட உள்ளது. தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் வரை சம்பவளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய கனிம வளத்துறையின் கீழ் தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (National Aluminium Company Limited or NALCO) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: என்ஏஎல்சிஓ நிறுவனத்தில் கிராசூவேட் என்ஜினீயர் டிரெய்னி (Graduate Engineer Trainee) பணிக்கு 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி மெக்கானிக்கல் பிரிவுக்கு 127 பேர், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 100 பேர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுக்கு 20 பேர், Metallurgy பிரிவுக்கு 10 பேர், கெமிக்கல் பிரிவுக்கு 13 பேர், கெமிஸ்ட்ரிக்கு 7 பேர் என மொத்தம் 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல், ப்ரோடக்டன் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், பவர் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டெலிகாம், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெட்டாலூர்ஜிகல் என்ஜினீயரி், கெமிக்கல் என்ஜினீயரிங், எம்டெக் அப்ளைட் கெமிஸ்ட்ரி, எம்எஸ்சி கெமிஸ்ட்ரி அல்லது ஏஐசி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 02.04.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.1.40 லட்சம் வரை வழங்கப்படும். ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துறை பணியாளர்கள் உள்பட மற்ற பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.100 ஆக இருக்கிறது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2ம் தேதிக்குள் nalcoindia.com இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் GATE மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications