தேர்வு இல்லை.. கைநிறைய சம்பளம்.. 12 முடித்தாலே என்ஐஇயில் அரசு வேலை.. சென்னை, நெல்லையில் தான் பணி!
சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு இல்லாத இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,800 முதல் ரூ.67,000 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கான நேர்க்காணல் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியியல் நிறுவனம் (National Institute of Epidemology or NIE) செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தேசிய தொற்றுநோயியியல் நிறுவனத்தில் சென்னை மற்றும் திருநெல்வேலியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய தகவல்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 12 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் - பி (மெடிக்கல்/நான் மெடிக்கல்), ப்ராஜெக்ட் லோவர் டிவிசன் கிளர்க், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் - பி (மெடிக்கல்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அப்பர் டிவிஷன் கிளர்க், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் சி (மெடிக்கல்) உள்ளிட்ட பணிக்கு தலா ஒருவர், ஜூனியர் நர்ஸ் பணிக்கு 7 பேர், ப்ராஜெக்ட் டெக்னீசியன் III (லேப்) பணிக்கு 10 பேர், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (டிரைவிங்/டெஸ்பேட்ச் ரைடிங்) பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் டெக்னீக்கல் ஆபிசர் (எம்எஸ்டபிள்யூ), மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (பீல்ட்/லேப்) பணிக்கு தலா 3, ப்ராஜெக்ட் ரீசர்ச் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10, 12, டிப்ளமோ, டிகிரி, மாஸ்டர் டிகிரி, எம்பிபிஎஸ், எம்டி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்புகள் உள்ளன. அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாதசம்பளம் என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் - பி (மெடிக்கல்/நான் மெடிக்கல்) பணிக்கு மாதம் ரூ.48 ஆயிரம் முதல் ரூ.61 ஆயிரம் வரையும், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் - பி (மெடிக்கல்) பணிக்கு ரூ.61 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் டெக்னீக்கல் ஆபிசர் (எம்எஸ்டபிள்யூ) பணிக்கு ரூ.32 ஆயிரம், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் சி (மெடிக்கல்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தலா ரூ.31 ஆயிரம், ஜூனியர் நர்ஸ், ப்ராஜெக்ட் டெக்னீசியன் III (லேப்) பணிக்கு தலா ரூ.18 ஆயிரம், அப்பர் டிவிஷன் கிளர்க், பணிக்கு ரூ.17 ஆயிரம், ப்ராஜெக்ட் லோவர் டிவிசன் கிளர்க் பணிக்கு ரூ.16 ஆயிரம்,
மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (டிரைவிங்/டெஸ்பேட்ச் ரைடிங்), மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (பீல்ட்/லேப்) பணிக்கு தலா ரூ.15,800 வழங்கப்பட உள்ளது.

நேர்க்காணல் மட்டுமே..
இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு என்பது கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களுடன் மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.

நேர்க்காணல் எங்கு நடக்கும்?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பி, ப்ராஜெக்ட் லோவர் டிவிஷன் கிளர்க், ப்ராஜெக்ட் ரீசர்ஜ் அசிஸ்டென்ட் (பீல்ட்), ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் சி (மெடிக்கல்) பணிக்கான நேர்க்காணல் ICMR-NIEல் நடக்க உள்ளது. மாறாக ப்ராஜெக்ட் ஜூனியர் நர்ஸ், ப்ராஜெக்ட் டெக்னீசியன் III (லேப்), ப்ராஜெக்ட் அப்பர் டிவிசன் கிளர்க், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (டிரைவிங்/டெஸ்பேட்ச் ரைடிங்), ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (பீல்ட்/லேப்) உள்ளிட்ட பணிகளுக்கான நேர்க்காணல் Model Rural Health Research Unit, Govt. Primary Health Centre campus, Kallur, Tirunelveli District, Tamil Nadu என்ற முகவரில் நடைபெற உள்ளது. ப்ராஜெக்ட் டெக்னிக்கல் ஆபிசர் (எம்எஸ்டபிள்யூ) பணிக்கு National Institute of Epidemiology - ICMR, Chennaiல் நேர்க்காணல் நடைபெற உள்ளது. எந்தெந்த பணிக்கு எந்தெந்த தேதிகளில் நேர்க்காணல் நடக்கும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
நேர்க்காணல் தேதி மாற்றம் தொடர்பான அறிவிப்பை காண Click Here
-
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை -
ABP: மீண்டும் திமுகவின் கோட்டையாகிறதா சென்னை? தலைநகரில் அக்கவுன்ட் ஓபன் செய்யும் தவெக? ஏபிபி சர்வே -
IT jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ஏப்ரல் 11ம் தேதி இண்டர்வியூ -
தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில்கள் மேலும் ரத்து... இரவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
Chennai: இந்த மனசு யாருக்கு வரும்.. ஊழியர்களுக்கு Audi கார் கொடுத்து அழகு பார்க்கும் சிஇஓ தினேஷ்! -
நெடுஞ்சாலைகளா? நகரச் சாலைகளா? டெல்லி பிளானை கையில் எடுத்த ஸ்டாலின்.. தரமான 'செக்' மேட்! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
ஆபீஸ் மீட்டிங்ல நீங்க எந்த சீட்ல உட்காருவீங்க? உங்க 'சீட்' செலக்ஷன் சொல்லும் ரகசியங்கள் இதோ! -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications