தொடக்கமே ரூ.37,000 சம்பளம்.. டிகிரி மட்டுமே போதும்.. என்ஐசிஎல் அரசு நிறுவனத்தில் அசத்தலான வேலை
சென்னை: நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-டில் காலியாக உள்ள 300 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் பணியை பெற முடியும்.
மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் பொதுத்துறை நிறுவனமாக நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL or National Insurance Company Limited) செயல்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்த அலுவலகத்தில் தலைமையிடம் என்பது செயல்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இதன் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: என்ஐசிஎல் நிறுவனத்தில் 300 உதவியாளர் (Assistant) பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி - மாதசம்பளம்: மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக தொடக்கத்தில் ரூ.37 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது மெட்ரோ சிட்டி உள்பட பிற நகரங்களுக்கு சற்று வேறுபட வாய்ப்புள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்கள் சார்ந்த சமூகத்தை பொறுத்து குறைந்தபட்சம் 10 வயது முதல் அதிகபட்சமாக 15 வயது வரை தளர்வு என்பது அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது https://nationalinsurance.nic.co.in/ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான தேதி என்பது இன்னும் வரவில்லை.
தேர்வு செய்வது எப்படி: இதனால் ஆன்லைன் விண்ணப்ப லிங்க் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெறவில்லை. இந்த லிங்க் என்பது பிப்ரவரி 2ம் தேதி முதல் இணையதளத்தில் இடம்பெறும். இதையடுத்து விண்ணப்பத்தாரர்கள் எளிதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications