நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. செம சான்ஸ்
சென்னை: நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் (Administrative Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள நிர்வாக அலுவலர் (Administrative Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 274 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இதற்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: மருத்துவர்கள் (28 பணியிடம்), சட்டம் (20), நிதி (30), ஆக்ஷ்ரியல் (Actuarial 02) ஐடி (20), ஆட்டோ மொபைல் என்ஜினியர்ஸ் (20 பணியிடம்), இந்தி (Rajbhasha) அலுவலர்கள் (20), ஜெனரலிஸ்ட் (130), பேக்லாக்( 02) என மொத்தம் 274 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: டாக்டர் பணியிடங்களுக்கு எம்.பி.பிஎஸ், /எம்.டி/எம்.எஸ் அல்லது பிஜி - மெடிக்கல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், லீகல் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து சட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். .
அதுபோல ஒவ்வொரு பணியிடத்திற்கும் துறை சார்ந்த படிப்புகள் கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. Generalist Officers பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தால் போதும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 02.12.1993 க்கு முன்பு பிறந்தவர்களும் 01.12.2002-க்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுதவரை 50,925 - 96,765 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதரார்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் நாளை (02.1.2024) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 22.01.2024 ஆகும்.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தேர்வு மையங்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வு அறிவிப்பை படிக்க https://nationalinsurance.nic.co.in/sites/default/files/NICL%20AO%20Recruitment%20Advertisment%202023-24.pdf கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications