நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 362 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இதுவே நேரம்!
சென்னை: இந்திய அரசின் பொது காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 362 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப பொறியியல், எம்பிஏ, சட்டம், சிஏ பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நிர்வாக அதிகாரி (நிலை - 1)
வயது வரம்பு: 30.11.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 17,240 - 32,640 + இதர சலுகைகள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 50.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு: 2015 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 24.01.2015.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புச் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications