சூப்பர் வாய்ப்பு.. மாதஊதியம் ரூ.19,900 டூ ரூ.1.12 லட்சம் வரை அள்ளலாம்.. அழைக்கும் என்டிஆர்ஓ
தேசிய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பானது அனைத்து சிறப்பு தொழில்நுட்ப நுண்ணறிவு மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி: மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்ய முடியும்.
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ( National Technical Research Organization or NTRO) என்பது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது அனைத்து சிறப்பு தொழில்நுட்ப நுண்ணறிவு மற்றும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் மொத்தம் 5 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 8 பேர், டெக்னீசியன் ஏ பணிக்கு 8 பேர், டெக்னீசியன் பி பணிக்கு 4 பேர், டெக்னீசியன் சி, டெக்னீசியன் டி பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகள் டெப்யூடேஷன்/அப்சார்ப்ஷன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, ஐடிஐ மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 2023 மார்ச் 21ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாத சம்பளம் என்ன?
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு Level 7 Pay matrix முறையில் மாதசம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன் ஏ பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், டெக்னீசியன் பி பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையும், டெக்னீசியன் சி பணிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையும், டெக்னீசியன் டி பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 22ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான ntro.gov.in இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை Deputy Director (R & P), National Technical Research Organisation, Block - III, Old JNU Campus, New Delhi - 110 067 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications