Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசாகப்பட்டினம் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் அப்ரெட்ண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 10,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணபிப்பது எப்படி என்ற விவரங்களை இங்கு காணலாம்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Job Jobs Government Jobs

பணியிடங்கள் விவரம்:

* மெக்கானிக் டீசல் - 32
* இயந்திர நிபுணர் - 12
* மெக்கானிக் (மத்திய ஏசி ஆலை, தொழில்துறை குளிர்விப்பு மற்றும் தொகுப்பு ஏர் கண்டிஷனிங்) - 06
* ஃபவுண்டரிமேன் - 03
* ஃபிட்டர் - 60
* பைப் ஃபிட்டர் - 30
* எலக்ட்ரீஷியன் - 35

* இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 05
* எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 17
* வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 20
* ஷீட் மெட்டல் தொழிலாளி - 30
* கப்பல் எழுத்தாளர் (மரம்) - 30
* பெயிண்டர் (பொது) - 15
* மெக்கானிக் மெக்காட்ரானிக்ஸ் - 10
* கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் - 15

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோல் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொருத்தவரை 02.01.2026 தேதிப்படி, ஆபத்து இல்லாத துறைகளுக்கு 14 வயது நிரம்பியவர்களும், hazardous பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் அப்ரென்டீஸ் பணியாளர்களுக்கு மாதம் ரூ.9,600 - ரூ.10,560 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எழுத்துத் தேர்வு மற்றும் மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை இருப்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்கள் விவரங்களை www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பிறகு அதன் நகல்களை பிரிண்ட் அவுட் எடுத்து, பாஸ்போர்ட் புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி
"The Officer-in-Charge (for Apprenticeship),
Naval Dockyard Apprentices School,
VM Naval Base S.O., P.O.,
Visakhapatnam - 530 014,
Andhra Pradesh"
என்ற முகவரிக்கு போஸ்ட் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2026 ஆகும்.
* தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+