இந்தியரை எப்படி கொல்லலாம்? ஈரான் மீது கடும் கோபத்தில் இந்தியா.. துணை தூதரை அழைத்து சம்மன்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் 'க்ரூஸ் ' வகை ஏவுகணையை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியர் ஒருவர் பலியானார். மேலும் 6 இந்தியர்கள் காயமடைந்த நிலையில் மத்திய அரசு கடும் கோபமடைந்துள்ளது. டெல்லியில் உள்ள ஈரானின் துணை தூதரை நேரில் வரவழைத்து அதிரடியாக சம்மன் வழங்கி உள்ளது.

union-government-summons-iran-diplomats-after-their-missile-strike-kills-indians-in-strait-of-hormuz

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்வதாக அறிவித்து ஈரான் - அமெரிக்கா மல்லுக்கட்டி வருகின்றன. இதனால் மீண்டும் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமனின் தெற்கு நீர்வழிப்பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'மொம்பசா'(Mombasa), அல் பஹியா (Al Bahiyah)' என்ற பெயர் கொண்ட 2 கப்பல்கள் சென்றன. 'க்ரூஸ்' வகை ஏவுகணை கொண்டு இந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் இந்திய ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் 6 இந்தியர்கள், 2 உக்ரைனியர்கள் என 8 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஈரானின் இந்த செயலால் மத்திய அரசு கடும் கோபமடைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணை தூதரை முகமது ஜாவேத் ஹொசைனியை மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து சம்மன் வழங்கி அனுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+