நிர்வாண போட்டோ அனுப்பிய பெண்.. 3008 மெசேஜ்கள்.. பதிலுக்கு இந்திய விமானப்படை அதிகாரி செய்ததை பாருங்க
சென்னை: ஒரு பெண் நிர்வாண போட்டோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்.. அதற்கு பதிலாக இந்திய விமானப்படையில் வேலை பார்த்த அதிகாரி செய்த காரியம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பெண் அனுப்பிய போட்டோக்களுக்கு பதிலாக, இந்தியாவின் போர் ரகசியங்களையே அவர் அனுப்பி வைத்துவிட்டாராம்.. இதுகுறித்த போலீஸ் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது...!!
இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக வேலை பார்ப்பவர் அந்த அதிகாரி. இவருடன் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய ஒரு பெண், வாட்ஸ்அப்பில் பேசியுள்ளார்.

நிர்வாண போட்டோக்கள்
கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை 2 பேரும் தொடர்ந்து பேசியுள்ளனர். அப்போது அந்தப் பெண், அதிகாரிக்கு நிர்வாண போட்டோக்களை அனுப்பியுள்ளார். இதற்கு பதிலாக இந்திய விமானப்படையின் ரகசிய போர் திட்டத்திலிருந்த ஒரு பக்கத்தை அந்த அதிகாரி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் அனுப்பும் ஒவ்வொரு நிர்வாண போட்டோவுக்கு பதிலாக, போர் திட்ட ஆவணத்தில் இருந்து ஒரு பக்கத்தை அனுப்புவதாக அந்த அதிகாரியே கூறியுள்ளார். இப்படியே தொடர்ந்து பாகிஸ்தான் பெண்ணுடன் பேசி வந்தாராம் அந்த கமாண்டர்.
விங் கமாண்டர் செய்த காரியம்
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அவர் வேலை பார்த்த அலுவலகத்துக்குள் செல்போனை எடுத்து சென்றிருக்கிறார்.. ரகசிய பணிகள் நடக்கும் அந்த அலுவலகத்துக்குள் செல்போன் எடுத்துச் செல்ல யாருக்குமே அனுமதி இல்லை... அதனால் அங்கிருந்த செக்யூட்டிகள், கமாண்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்தபோதுதான், பாகிஸ்தான் பெண்ணுடன் அவர் வாட்ஸ்அப்பில் பேசியது, இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள், அனுப்பப்பட்ட போட்டோக்கள் மற்றும் ராணுவ ரகசியங்கள் தொடர்பான தகவல்களையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விமானப்படையின் ரகசியங்கள்
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.. இது தொடர்பாக விசாரணையும் தொடங்கியது. பிறகு மே 30-ம் தேதி விங் கமாண்டர் கைது செய்யப்பட்டார்.. இந்த விவரங்கள் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
அந்த அதிகாரி இந்திய விமானப்படையின் ட்ரோன் படை பற்றிய பல தகவல்களையும் பாகிஸ்தான் பெண்ணுக்கு அனுப்பி விட்டாராம்.. அந்த ட்ரோன் படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், ட்ரோன்கள் எவ்வளவு நேரம் தொடர்ந்து பறக்கும் என்பது போன்ற தகவல்களையும் அசால்ட்டாக அனுப்பியுள்ளாராம்.
கசிந்த ரகசியங்கள்
ட்ரோன்கள் மூலம் எதிரிகளை எப்படி தாக்க முடியும்? போர் வந்தால் இந்த ட்ரோன்களை எங்கு நிறுத்துவார்கள்? லே பகுதியில் இந்திய போர் விமானங்கள் எங்கு நிறுத்தப்படும்? ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் நடந்த ராணுவப் பயிற்சி பற்றிய தகவல்கள் என மொத்த சீக்ரெட்டையும் அப்பெண்ணுக்கு ஷேர் செய்தாராம் விங் கமாண்டர்.
இந்த வழக்கில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது. அந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு, சில ஆப்களையும், வெப்சைட் லிங்குகளையும் அனுப்பியுள்ளார் விங் கமாண்டர்.. அந்த லிங்குகளில் இருந்தது என்ன தெரியுமா? மற்றவர்களின் செல்போன்களில் உள்ள தகவல்களை அவர்களுக்கு தெரியாமலேயே பார்க்க உதவும் சாப்ட்வேர்கள்தான் அவை.
3008 மெசேஜ்கள், 4 வீடியோ கால்
இந்த சாப்ட்வேர்களை விங் கமாண்டரே, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி தன்னிடம் வேலை பார்த்த 5 அதிகாரிகளின் செல்போன்களிலும் உளவு பார்த்தாராம் விங் கமாண்டர்.. அதாவது, அந்த 5 பேரின் செல்போன்களில் என்னென்ன தகவல்கள் உள்ளன என்பதையும், அவர்கள் தங்களது மேலதிகாரிகளிடம் என்ன பேசுகிறார்கள் என்பதையும் நோட்டமிட்டதாக தெரிகிறது.
இப்போதைக்கு அந்த விங் கமாண்டரின் வாட்ஸ்அப் தகவல்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் பாகிஸ்தான் பெண்ணுக்கு மொத்தம் 3,008 மெசேஜ்களை அனுப்பியிருக்கிறாராம்.. 65 போட்டோக்கள், 65 ரியாக்ஷன்ஸ், 42 ஆடியோ கால்கள், 4 வீடியோ கால்கள் மற்றும் 6 வெப்சைட் லிங்குகளும் இருவருக்கும் இடையே பகிரப்பட்டுள்ளன. இத்தனை தகவல்களையும் போலீசார் தங்களது விசாரணையில் ஆய்வு செய்துள்ளனர்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
இந்த வழக்கில் அந்த அதிகாரி மீது இந்திய ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த விங் கமாண்டர், போலீஸ் கஸ்டடியில் உள்ளார். இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் எந்த அளவுக்கு வெளியே சென்றுள்ளன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் அனுப்பிய நிர்வாண போட்டோக்களுக்கு ஆசைப்பட்டு, தாய் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களையே பகிர்ந்ததாக விமானப்படை அதிகாரி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!


Click it and Unblock the Notifications
