ஜனவரியில் ரூ.13, பிப்ரவரியில் ரூ.9.50! அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரசு வாங்கப்போகும் மின்சார விலை!
சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு கோடைகாலம் முதல் தற்போது வரை எதிர்பாராத மின் தேவை ஏற்பட்டதால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு கோடைகால தேவையை முன்னிட்டு தற்போதே மின்சாரம் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. 9 ரூபாய் முதல்13.50 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கானவிலை புள்ளிகள் வந்திருப்பதாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும், மின்விசிறி ஏசி ஆகியவற்றின் பயன்பாடு காரணமாக இந்த தேவை அதிகரிக்கும். இதை அடுத்து உற்பத்தியை தவிர்த்து வெளியிடங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.

ஆனால் இந்த ஆண்டு எல் நினோ பாதிப்பு காரணமாக அக்டோபர் மாதம் வரை இரவு நேரங்களில் அதிக வெப்பம் உணரப்பட்டது. இதனால் ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு நீடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் தொழில் தேவைக்கான மின்சார தேவையும் அதிகரித்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சமாளிப்பதற்காக 4500 மெகா வாட் மின்சாரத்தை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது.
ஆனால் ஒரு யூனிட் 35 என்ற அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் மிகப்பெரிய ஊழல் அரங்கேறி இருப்பதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின. இந்த நிலையில் தற்போது ஓரளவு மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு கோடைகாலத்தை முன்னிட்டு மின்சார கொள்முதலை தற்போதே தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் குறுகிய காலத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்ற நிலையில் ஒரு யூனிட் மின்சாரத்தை 9.50 முதல் 13 ரூபாய் வரை தர பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு!
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.
யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ...
கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு!அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ...Jan - ஒரு யூனிட் ரூ.13 Feb - ஒரு யூனிட் ரூ.9.50 Mar - ஒரு யூனிட் ரூ.10 Apr - ஒரு யூனிட் ரூ.10 May - ஒரு யூனிட் ரூ.9.95 June - ஒரு யூனிட் ரூ.13 இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) November 14, 2026
Jan - ஒரு யூனிட் ரூ.13
Feb - ஒரு யூனிட் ரூ.9.50
Mar - ஒரு யூனிட் ரூ.10
Apr - ஒரு யூனிட் ரூ.10
May - ஒரு யூனிட் ரூ.9.95
June - ஒரு யூனிட் ரூ.13
இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்." எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
