பிக்பாஸிலிருந்து எகிறி குதித்து வர காரணம்.. உள்ளே நடந்த விஷயத்தை பல வருடம் கழித்து பேசிய பரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் சீசனில் பரணி சுவரை ஏரி குதித்து வெளியே வர முயற்சி செய்த சம்பவம் தான் இப்ப வரைக்கும் பெரிதாக பேசப்படுகிறது. தற்போது 10வது சீசன் வந்துவிட்டது ஆனாலும் முதல் சீசனில் நடந்த இந்த சம்பவம் இன்னும் பலருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தான் எதற்காக அப்படி ஒரு முடிவை எடுத்தேன் என்பதை பற்றி பல வருடம் கழித்து நடிகர் பரணி பேசி இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைக்கு ரொம்பவும் நெருக்கமானது. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு சம்பவம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வைரலாகிவிடும். இப்போ கூட ஓடிடி இருக்கிறது அதில் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஆரம்ப கட்டத்தில் அப்படி கிடையாது. ஒரு மணி நேரம் மட்டும் தான் ஒளிபரப்பாகும். 24 மணி நேரம் நடந்த சம்பவங்களை கட் பண்ணி ஒரு மணி நேரமாக ஒளிபரப்பு ஆகும். அதுவும் முதல் சீசனை சொல்ல வேண்டாம், அதற்கு முன்பு தமிழில் இதுபோன்ற நிகழ்ச்சி வராததால் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் அது சர்ப்ரைஸ் தான். என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்று தெரியாமல் தான் முதல் சீசன் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Bigg Boss Bharani Vijay TV Kamal Hassan

அதற்குப் பிறகு வந்த சீசன் கூட முந்தைய சீசனை பார்த்து பலர் கற்றுக் கொண்டனர். ஆனால் முதல் சீசன் போட்டியாளர்கள் ரொம்பவும் பிரபலமானவர்கள். அதுபோலத்தான் முதல் சீசனில் போட்டியாளராக வந்தவர் பரணி, 2 வாரத்திலேயே நான் இந்த நிகழ்ச்சியில் இருக்க மாட்டேன், என்னை வீட்டை விட்டு அனுப்பி விடுங்க என்று சொல்லி அழது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். ஒரு கட்டத்தில் பிக் பாஸ் சுவற்றில் ஏறி வெளியே குதிக்க முயற்சி செய்தார். அப்போது பிக் பாஸ் அவரை அழைத்து அட்வைஸ் செய்து பார்த்திருந்தார். அதற்கு பிறகும் பரணி சம்மதிக்கவில்லை என்பதால் அவர் வெளியேற்றப்பட்டார். இது பற்றி அவர் சாய் வித் சித்ரா என்ற யூடியூப் சேனலில் பரணி அளித்த பேட்டி இப்ப வைரல் ஆகி வருகிறது.

நடிகர் பரணி பேட்டி

அதில் அவர் பேசும்போது, நான் அச்சம் தவீர் என்ற ஒரு நிகழ்ச்சியில் விஜய் டிவியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் நம்மை வெளியேற்றி விட கூடாது என்பதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அதனால் இந்த பரணி ஏதோ பண்ணுவான் என்று நம்பி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினாங்க. ஆனால் அந்த நிகழ்ச்சி அதுபோல கிடையாது. உள்ளே போன பிறகு தான் எனக்கு நிகழ்ச்சி பற்றி கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. அதற்கு பிறகு உள்ளிருந்த போட்டியாளர்களுடன் என்னால் சண்டை போடவும், அவர்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் நான் மனம் வெறுத்ததற்கு காரணம், உள்ளிருந்தவர்கள் எல்லோரும் பரணி உள்ளே இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள். அதுவும் சினேகன் தலைமையில் நடந்த ஆலோசனை எல்லாம் எனக்கு ரொம்பவும் மன வருத்தம் கொடுத்தது.

பிக் பாஸ்க்குள் நடந்த சம்பவம்

அதற்கு முன்பே எனக்கு சினேகனை நன்றாக தெரியும், அவருக்கு என்னை தெரியும். அப்படி இருக்கும் போது அவர் நமக்கு எதிராக இப்படி பேசி இருக்கிறாரே என்று தான் நான் மனம் வெறுத்து வெளியே வர முயற்சி செய்தேன். அதற்குப் பிறகு கமல்ஹாசன் என்னிடம் பேசினாரு. அந்த சமயம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பிக் பாஸ் முதல் நாள் நான் உள்ளே போனதற்கு முக்கிய காரணம் கூட கமல்ஹாசன் தான். நான் பரமக்குடி பக்கத்து ஊரை சேர்ந்தவன் என்பதால் கமல்ஹாசன் மீது எனக்கு ரொம்பவும் பாசம் அதிகமாக உண்டு. அவரை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் பிக் பாஸ் போனேன்.

கமல்ஹாசன் கொடுத்த சந்தோஷம்

முதல் நாள் கமல்ஹாசன் சாரை பார்த்துவிட்டு உள்ளே போன பிறகு 14 நாள் கழித்து தான் அவரைப் பார்த்தேன். அந்த நாள் தான் எனக்கு மீண்டும் சந்தோஷத்தை கொடுத்த நாள். உள்ளிருந்த 14 நாளும் எனக்கு துக்க நாள் என்று பரணி பேசி இருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்ப கூட பிக் பாஸ் வீட்டிற்குள் இதே போல தான் பல போட்டியாளர்கள் சந்தோஷமாக உள்ளே போய்விட்டு சில நாட்களிலேயே நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சனிக்கிழமை எபிசோடில் கூட விஜய் சேதுபதி, ஜேசன் மற்றும் வாசன் சண்டையில் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. வாசனை அடிக்க போன ஜெய்சனுக்கு ரெட் கார்ட் கிடைக்குமா? என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் குரல் இல்லாத வாரம் என்று சொல்லப்பட்டு உள்ளிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரை பிக் பாஸாக இருக்க டாஸ்க் வைத்தனர். அதில் வினோத் பாபுவை முதலில் செலக்ட் செய்தனர்.

இந்த வாரம் பிக் பாஸ் சம்பவம்

வினோத் பாபு பிக் பாஸாக நன்றாக தான் வீட்டை கவனித்து வந்தார். ஆனால் ஏனோ உள்ளுக்கும் போட்டியாளர்களுக்கு தான் வழக்கம் போல அவர் மீது பொறாமை வந்து விட்டது போல. அவரை பிக் பாஸாக இருக்கக் கூடாது என்று எல்லோரும் போட்டி போட்டனர். கடைசியில் அவருடைய பதவியையும் பறிக்கப்பட்டது. அப்போது அவர் அழுத கொண்டு இருந்தார். ஆனால் அவரை பதவி இறக்கிவிட்டு அந்த பதவிக்கு வந்த முனியம்மா ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் அழுது கொண்டிருந்தார். அதை எல்லாம் பார்க்கும் போது ஒரு மனுஷன் ஒரு பொறுப்பில் நல்லது பண்ணிக் கொண்டிருந்தால் அவரை அதிலிருந்து தூக்க வேண்டும் என்ற ஆசை தான் பலருக்கு வருது. ஆனால் அதற்கு பிறகு தான் அந்த கஷ்டம் எல்லோருக்கும் தெரியும் என்பது இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+