பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.. வனத்துறை செம திட்டம்! யாருக்கு நன்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பனை மரங்களை பாதுகாக்க தமிழக வனத்துறை புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழக வனத்துறை இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதற்காக பனை மரபணு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை மரங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அவற்றின் மரபணுவைப் பாதுகாக்கும் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் பனை மரம் வளர்ப்பவர்களுக்கும், பனைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் என்ன நன்மை கிடைக்கும்?

பனை மரத்தில் இருந்து நமக்குப் பல பயன்கள் கிடைக்கின்றன. நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, பனை வெல்லம், கருப்பட்டி என பல உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. பனை ஓலைகளைக் கொண்டு கூடை, பாய் உள்ளிட்ட பொருட்களையும் தயாரிக்கிறார்கள். இதனால் பனை மரங்கள் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளன.

Palm Genetic Conservation Project Tamil Nadu Forest Department Palm Tree Research

பனை மரங்களை வளர்ப்பதில் சவால்கள்

ஆனால், பனை மரங்களை வளர்ப்பது முதல் அவற்றில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்வது வரை நிறைய சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, பனை மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பது பெரிய சவாலாக உள்ளது. பதநீரை வீணாகாமல் பாதுகாப்பதும், பனைப் பொருட்களைத் தயாரித்து நல்ல விலைக்கு விற்பனை செய்வதும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

அதனால்தான், இந்த பிரச்சினைகளைக் குறைத்து பனைத் தொழிலை வளர்க்க தமிழக அரசு ஏற்கெனவே சில முயற்சிகளை எடுத்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள்

இந்த ஆராய்ச்சி நிலையத்தில் உயரம் குறைவாக வளரும் பனை மரங்களை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டது. பொதுவாக பனை மரங்கள் மிகவும் உயரமாக வளரும். அவற்றில் ஏறி பதநீர் இறக்குவதற்கும், நுங்கு பறிப்பதற்கும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். உயரம் குறைவாக வளரும் பனை மரங்களை உருவாக்க முடிந்தால், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

அதேபோல், பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க ஆய்வக வசதியும் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. பனைப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பது, அவற்றைத் தரமாகத் தயாரிப்பது தொடர்பான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மேலும், பனைப் பொருட்களைத் தயாரிக்கும் மையங்களுக்கு 510 இயந்திரங்கள் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் 124 மையங்கள் பயன்பெற்றதாகவும் அரசு அறிவித்தது. பனை விதைகள் மற்றும் பனை கன்றுகளை வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பனை மரபணு ஆய்வுக்கு ரூ.50 லட்சம்

இந்த நிலையில், பனை மரங்களை பாதுகாக்க தமிழக வனத்துறை புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பனை மரங்களின் தனித்தன்மைகளை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் இந்த முயற்சிதான் இப்போதைய முக்கிய அறிவிப்பாகும்.

இந்த திட்டத்தில் பனை மரங்களின் மரபணுப் பண்புகளை ஆய்வு செய்யவும், அவற்றை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை இன்னும் எளிமையாக சொன்னால், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வளரும் பனை மரங்களுக்கு இடையே என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய உள்ளனர். ஒவ்வொரு வகை பனை மரத்திலும் என்ன சிறப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் தன்மைகளைப் பாதுகாப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்வின் மூலம் பனை மரங்களின் பல்வேறு வகைகளைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். எதிர்காலத்தில் பனை மரங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த ஆய்வு உதவக்கூடும். இந்தத் திட்டம் 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்

தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பனை மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. அவற்றின் வேர்கள் மண்ணை இறுக்கிப் பிடித்துக்கொள்வதால் மண் அரிப்பை குறைக்கவும் உதவுகின்றன.

அதுமட்டுமல்ல, பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பது பனைத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் ஏகப்பட்ட பயன்களை தரும். பனை மரங்களை நடுவது, பனைப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு உதவுவது, பனை மரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது என பல்வேறு வழிகளில் பனை மரங்களை பாதுகாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன..

இந்த முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால், பனை மரங்களை நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். பனை மரங்களைப் பாதுகாப்பதுடன், அவற்றை சார்ந்த தொழில்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கு இந்த முயற்சிகள் உதவக்கூடும் என்றே நம்பப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+