Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவோதயா பள்ளியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! ரூ.44 ஆயிரம் முதல் 2.9 லட்சம் வரை மாத சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக கிடைக்கும்.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidhyalaya Samithi or NVS) பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்த பள்ளிகளில் குரூப் ஏ, குரூப் பிரிவில் பணிபுரிவதற்காக முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகள் என மொத்தம் 1616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி முதல்வர் பொறுப்புக்கு 12 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 397 பேர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 683 பேர், பயிற்சி அளிக்கப்பட்ட மூன்றாவது மொழி ஆசிரியர் பதவிக்கு 343 பேர், இதரவகை ஆசிரியர்களாக 181 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

 வயது, கல்வித்தகுதி என்ன?

வயது, கல்வித்தகுதி என்ன?

முதல்வர் பதவிக்கு 50 வயதுக்கு உள்ளும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 40 வயதுக்குள்ளும், பயிற்சி பெற்ற இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 35 வயதுக்குள்ளும், இதர ஆசிரியர்கள் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும். முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்ட மேற்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்து பிஎட் முடித்து பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலை படிப்பு முடித்து பிஎட் பெற்றிருக்க வேண்டும். பிற ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புடன் பிஎட் முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

முதல்வர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 800 முதல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.47 ஆயிரத்து 600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100ம், பயிற்சி பெற்ற இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 900 முதல் ரூ.1.42 லட்சத்து 400 வரையும் மாத சம்பளமாக கிடைக்கும்.

 தேர்வு முறை எப்படி?

தேர்வு முறை எப்படி?

CBT (Computer Based Test)முறை மற்றும் நேர்க்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணமாக முதல்வர் பதவிக்கு ரூ.2000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,800, மற்றவர்களுக்கு ரூ.1500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிஎச் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. இந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.navodaya.gov.in இணையதளம் சென்று recruitment link என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படைத் தகவலையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்திசெய்ய வேண்டும்.விண்ணப்பம் செய்ய ஜூலை 22ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click here செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Click here செய்து பயன்பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+