கண்ணா லட்டு தின்ன ஆசையா.. கடற்படை, விமானப்படையில் ஒரே நேரத்தில் அழைப்பு.. ரெடியா?
சென்னை: இலவசமாக பிடெக் படித்து கடற்படையில் கையோடு அதிகாரியாக விரும்புவோருக்கு இந்திய கடற்படை நல்ல வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜூன் 30ம் தேதி கடைசி தேதியாகும். இதேபோல் விமானப்படையிலும் அதிகாரியாக விண்ணப்பிக்கலாம்.
இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் 10, +2, பி.டெக் நுழைவு திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கு இலவச பி.டெக் படிப்பில் சேர்ந்து பட்டம் பெறலாம். அத்துடன் இந்திய கடற்படையில் அதிகாரியாகவும் பணிபுரியலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: ஆபீசர் (Executive & Technical Branch )
மொத்த காலியிடம்: 30
வயது: 2.7.2004-க்கும் 1.1.2007 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கடற்படை தெரிவித்துள்ளது.
எப்படி தேர்வு செய்யப்படவார்கள் JEE Main Exam -2023 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2023
விமானப்படை வேலை: இந்திய கடற்படையைப் போல் இந்திய விமானப்படையிலும் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிபுரிய இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
என்னென்ன பணியிடங்கள் உள்ளன என்பதை பார்ப்போம். ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 காலியிடங்கள் இருக்கின்றன.
என்ன கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: பிளையிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்.
கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பட்டம். டெக்னிக்கல் அல்லாத பிரிவுக்கு ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: 1.7.2024 தேதியின்படி பிளையிங் பிரிவுக்கு 20 - 24 வயதிற்குள்ளும், கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 - 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் எப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்: எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம் எங்கெல்லாம் இருக்கும் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.6.2023
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications