ரெடியா? கைநிறைய சம்பளம்.. என்எப்சியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. வெளியான அசத்தல் அறிவிப்பு..

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.21,700 முதல் அதிகபட்சமாக ரூ.67,700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் அணுசக்தி துறையின் அணுஎரிபொருள் வளாகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. 10, 12ம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் பிஇ, பிடெக் முடித்தவர்கள் வரை இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இதில் பல பணிகளுக்கு நேர்க்காணல் மட்டுமே உள்ளதால் விண்ணப்பம் செய்பவர்கள் எளிமையாக மத்திய அரசு பணியை பெற முடியும்.

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் அணுஎரிபொருள் வளாகத்தில் (Nuclear Fuel Complex)
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி மொத்தம் 6 பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

அணு எரிபொருள் வளாகத்தில் காலியாக உள்ள Chief Fire Officer பணிக்கு ஒருவர், Technical Officer பணிக்கு 3 பேர், Deputy Chief Fire Officer பணிக்கு 2 பேர், Station Officer பணிக்கு 7 பேர் Sub-Officer பணிக்கு 28 பேர், Driver-cum-Pump Operator-cum Fireman பணிக்கு 83 பேர் என 125 பேருக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

 கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?

கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?


Chief Fire Officer, Deputy Chief Fire Officer, Station Officer, Sub-Officer பணிக்கு 40 வயதுக்குள்ளும், Technical Officer பணிக்கு 35 வயதுக்குள்ளும், Driver-cum-Pump Operator-cum Fireman பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அரசு விதிகளின் படி பிற பிரிவினருக்கும் வயது வரம்பில் தளர்வு என்பது உண்டு.

மாதசம்பளம் என்ன?

மாதசம்பளம் என்ன?

Chief Fire Officer பணிக்கு மாதம் ரூ.67,700, Technical Officer, Deputy Chief Fire Officer பணிக்கு ரூ.56,100, Station Officer பணிக்கு மாதம் ரூ.47,600, Sub-Officer பணிக்கு ரூ.35,400, Driver-cum-Pump Operator-cum Fireman பணிக்கு மாதம் ரூ.21,700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர டிஏ, பிற அலோவன்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

தேர்வு செய்வது எப்படி?

சீப் பயர் ஆபிசர், டெபுட்டி சீட் பயர் ஆபிசர், ஸ்டேஷன் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் உயரம், எடை, மார்பளவு உள்ளிட்டவற்றை கணக்கீடும் Physical Standard தேர்வை தொடர்ந்து நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள். சப் ஆபிசர், டெக்னிக்கல் ஆபிசர், டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணிக்கு Physical Standard,Command Test, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பிஇ, பிடெக் முடித்தவர்களும், 10, 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்து கனரக வாகனங்களுக்கான ஹெவி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் பணிக்கான விண்ணப்ப கட்டணமும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரூ.500, ரூ.200, ரூ.100 என தனித்தனியே விண்ணப்ப கட்டணம் உள்ளது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் http://www.nfc.gov.in/ எனும் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.


பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

https://www.nfc.gov.in/pdf/recruitment-advt/2023/nfc-01-2023.pdf


பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here


https://i-register.in/diamondreg23/Home.html


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

https://www.nfc.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+