Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? மாதஊதியம் ரூ.35,400 டூ ரூ.2.15 லட்சம்! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை! நல்ல வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.35,400 முதல் ரூ.2.15 லட்சம் சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (National Highways Authority of India or NHAI) செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 NHAI recruitment 2023 for various post on salary given to Rs.35,400 to Rs.2.15 laks per month

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஜெனரல் மேனேஜர் (டெக்னீக்கல்) பணிக்கு 10 பேர், துணை பொது மேலாளர் (டெக்னீக்கல்) பணிக்கு 20 பேர், மேனேஜர் (டெக்னீக்கல்) பணிக்கு 30 பேர், ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் பணிக்கு 2 பேர் என மொத்தம் 62 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜெனரல் மேனேஜர் (டெக்னீக்கல்) பணிக்கு மாதம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 100 முதல் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 900 வரை சம்பளம் வழங்கப்படும். துணை பொதுமேலாளர் (டெக்னீக்கல்) பணிக்கு மாதம் ரூ.78800 முதல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 வரை வழங்கப்படும். அதேபோல் மேனேஜர் (டெக்னீக்கல்) பணிக்கு மாதம் ரூ67,700 முதல் ரூ.2.08 லட்சம் வரையும், ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஹிந்தியில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிற 3 பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் சிவில் பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதோடு இது Deputation முறையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இதனால் விண்ணப்பத்தாரர்கள் மாநில அல்லது மத்திய நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வர வேண்டியது கட்டாயமாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் nhai.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் அக்டோபர் மாதம் 27ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அதன்பிறகு விண்ணப்பத்துக்கான ஹார்ட் காப்பி மற்றும் விண்ணப்ப படிவத்தை கல்வி சான்று நகல்களுடன் Self Attested உடன் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி General Manager (Technical) மற்றும் Deputy General Manager (Technical)பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதற்கான விண்ணப்பத்தை DGM (HR & Admn-III)-NG National Highways Authority of India Plot Not.G-5&6, Sector-10, Dwarka, New Delhi - 110 075 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாறாக Manager (Technical), Junior Hindi Translator பணிக்கு விண்ணப்பம் செய்வோர் DGM (HR & Admn-I)-SKM, National Highways Authority of India, Plot No.G-5&6, Sector-10, Dwarka, New Delhi-110075 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+