ரெடியா? மாதசம்பளம் ரூ.29,200 முதல் ரூ.92,300.. என்ஐஏ-வில் ஏஎஸ்ஐ வேலை.. சென்னையிலும் பணி வாய்ப்பு!
டெல்லி: என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சென்னையிலும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதோடு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 44 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இது டெபுடேசன் வகை பணியாகும்.
இதனால் விண்ணப்பம் செய்வோர் மத்திய அரசு, மாநில அரசு, யூனியன் பிரதேசங்களில் விசாரணை அமைப்புகளில் பணியாற்றி வர வேண்டும். மேலும் கிரிமினல் வழக்கு அல்லது உளவுத்துறை பிரிவு அல்லது தகவல் தொழில்நுட்ப நிர்வாக பிரிவில் 2 ஆண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 2023 ஜூன் மாதம் 13ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.29,200 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பம் செய்ய கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், புவனேஸ்வர், பாட்னா உள்பட இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் nia.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை SP(Adm), NIA HQ, Opposite CGo Complex, Lodhi Road, New Delhi - 110 003 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 13ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications