மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 500 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்!
சென்னை: மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் NIACL -இல் 500 அப்பரெண்டீஸ் டிரெய்னிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.9000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
NIACL என்பது மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனம் (The New India Assurance Company Limited) ஆகும். உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித் தகுதி என்ன என்பன போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
நாடு முழுவதும் அப்ரண்டீஸ் டிரெய்னிங் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 500 பணியிடங்கள் ஆகும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், எஸ் சி / எஸ் டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் : https://www.newindia.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழி கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினர் என்றால் ரூ.944 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ் சி எஸ்டி பிரிவினர் என்றால், 708 கட்டணமும், மாற்றுத்திறனாளிகள் எனில் ரூ.472 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 06.06.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.06.2025 ஆகும். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டுமே பணி செய்ய முடியும். தேர்வுக்கு விண்ணப்பிக்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications