ரூ.32,000 டூ ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. சென்னை, திருச்சியில் பணி.. என்ஐஇ-யில் அசத்தலான வேலைவாய்ப்பு
சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் சென்னை, திருச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Research or ICMR) செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சென்னை அய்யப்பாக்கம் தமிழ்நாடு ஹவுசிங் போர்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemology or NIE) அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி கன்சல்டன்ட் பணிக்கு மெடிக்கல் பிரிவில் 3 பேர், தொற்றுநோயியல் பிரிவுக்கு ஒருவர், மெடிக்கல் அல்லாத பிரிவுக்கு 2 பேர், மெடிக்கல் அல்லாமல் ஐடி பிரிவு, டேட்டா சயின்ஸ்/எம்எல், ஐடி/வெப் டெவலப்மென்ட் பிரிவுகளுக்கு தலா ஒருவர், ரீசர்ஜ் அசிஸ்டென்ட் பிரிவுக்கு 14 பேர் என மொத்தம் 23 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: கன்சல்டன்ட் (ஐடி, ஐடி/வெப் டெவலப்மென்ட், ரீசர்ஜ் சிஸ்டென்ட்) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 6 வயதுக்குள் இருக்க வேண்டும். ம பிற பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 01.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: கன்சல்டன்ட் மெடிக்கல் பணிக்கு எம்பிபிஎஸ் எம்டி/டிஎன்பி, மாஸ்டர் டிகிரி பிஎச்டியும், தொற்றுநோயியல் பிரிவுக்கு எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/பிஏஎம்எஸ்/பிஎச்எம்எஸ் படிப்பும் முடித்திருக்க வேண்டும். கன்சல்டன்ட் மெடிக்கல் அல்லாத (Non Medical) பிரிவுக்கு மாஸ்டர் டிகிரி, பிஎச்டியும், மெடிக்கல் அல்லாத ஐடி பிரிவுக்கு பிஇ, பிடெக், மாஸ்டர் டிகிரியும், டேட்டா சயின்ஸ்/எம்எல் பிரிவுக்கு மாஸ்டர் டிகிர, பிஎச்டியும், ஐடி/வெப் டெவலப்மென்ட் பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி படிப்பும், மருத்துவம் அல்லாத கன்சல்டன்ட் ரீசர்ஸ் அசிஸ்டென்ட் பணிக்கு பட்டமேற்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: கன்சல்டன்ட் (மெடிக்கல்), கன்சல்டன்ட் (தொற்றுநோயியல்) பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். கன்சல்டன்ட் (நான் மெடிக்கல், நான் மெடிக்கல் ஐடி ) பணிககு ரூ.75 ஆயிரம், கன்சல்டன்ட் (டேட்டா சயின்ஸ்/எம்எல், ஐடி/வெப் டெவலப்மென்ட்) பணிக்கு ரூ.1 லட்சமும், கன்சல்டன்ட் (ரீசர்ஜ் அசிஸ்டென்ட்) பணிக்கு ரூ.32 ஆயிரமும் மாதசம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 1ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nie.gov.in சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, திருச்சி, கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர், கலபுரகி, பெலகாவி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 1.18 லட்சம் சம்பளம்.. 10 டூ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்!












Click it and Unblock the Notifications