8ம் வகுப்பு டூ டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு.. நீலகிரியில் தான் பணி! அழைக்கும் சுகாதாரத்துறை
நீலகிரி: நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்தால் தேர்வு ஏதுமின்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ‛செலக்ட்' செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புதுஅறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி ஆடியோலாஜிஸ்ட், ஆடியோமெட்ரிக் அசிஸ்டென்ட், ஸ்பீச் தெரபிஸ்ச், ஆடியோலாஜிஸ் & ஸ்பீச் தெரபிஸ்ட், ஆப்டோமெட்ரிஸ்ட், டென்டல் டெக்னீசியன், செக்யூரிட்டி வொர்க்கர், ஹாஸ்பிட்டல் அட்டென்டன்ஸ், எச்எம்ஐஎஸ் ஐடி கோ ஆடிநேட்டர், சைக்கார்ட்ரிக் நர்ஸ், நியூட்ரிஷியன் கவுன்சிலர், குக் கம் கேர் டேக்டர், மல்டிபர்பஸ், ஹாஸ்பிட்டல் வொர்க்கர், டிரைவர் (எம்எம்யூ) பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும், லேப் டெக்னீசியன் பணிக்கு 5 பேர், மல்டிபர்பஸ் ஹெல்த் வொர்க்கர் பணிக்கு 3 பேர், பிசியோதெரபிஸ்ட், ஓடி அசிஸ்டென்ட், மல்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் பணிக்கு 2 பேர் என மொத்தம் 28 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆடியோலாஜிஸ்ட் பணிக்கு இளங்கலை ஆடியோலாஜிஸ்ட் படிப்பும், ஆடியோமெட்ரிக் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ படிப்பு அல்லது சான்று படிப்பு முடித்திருக்க வேண்டும். ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ஸ்பீச் லேங்குவேஜ் பாதோலாஜி பிரிவில் மாஸ்டர் டிகிரியும் முடித்திருக்க வேண்டும்.

மேலும் ஆடியோலாஜிஸ் & ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ஸ்பீச் மற்றும் லேங்குவேஜ் பாதலோஜி பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பும், ஆப்டோமெட்ரிஸ்ட் பணிக்கு இளங்கலை அல்லது முதுகலை பிரிவில் ஆப்போமெட்ரிஸ்ட், , டென்டல் டெக்னீசியன் பணிக்கு ஒன்று அல்லது 2 ஆண்டு டென்டல் டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
செக்யூரிட்டி வொர்க்கர், ஹாஸ்பிட்டல் அட்டென்டன்ஸ், மல்டிபர்பஸ் ஹெல்த் வொர்க்கர், மல்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர், பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இதுதவிர எச்எம்ஐஎஸ் ஐடி கோ ஆடிநேட்டர் பணிக்கு எம்சிஏ, பிஇ, பிடெக் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.
சைக்கார்ட்ரிக் நர்ஸ் பணிக்கு நர்சிங் தகுதியும், நியூட்ரிசியன் கவுன்சிலர் பணிக்கு பிஎஸ்சி நியூட்ரிசியன் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட் பணிக்கு இளங்கலை பிசியோதெரபிஸ்ட் படிப்பையும், ஓடி (ஆபரேஷன் தியேட்டர்)அசிஸ்டென்ட் பணிக்கு 3 மாத ஓடி டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆடியோலாஜிஸ் & ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ரூ.20 ஆயிரம், நியூட்ரிசியன் கவுன்சிலர் பணிக்கு ரூ.15,000, எச்எம்ஐஎஸ் ஐடி கோ ஆடிநேட்டர் பணிக்கு ரூ.16,500, ஓடி அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.11,200, பிசியோதெரபிஸ்ட் பணிக்கு ரூ.10,250, சைக்கார்ட்ரிக் நியூட்சியன் நர்ஸ் பணிக்கு ரூ.10,000, ஆப்டோமெட்ரிஸ்ட் பணிக்கு ரூ.9,500 என மாதசம்பளம் வழங்கப்படும்.
மேலும் மல்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் பணிக்கு ரூ.8,500, ஆடியோலாஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட், டென்டல் டெக்னீசியன் பணிக்கு ரூ.9 ஆயிரம், ஆடியோமெட்ரிக் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.7,520, மல்டிபர்பஸ் ஹெல்த் வொர்க்கர் பணிக்கு ரூ.7,500, செக்யூரிட்டி வொர்க்கர், ஹாஸ்பிட்டல் அட்டென்டன்ஸ் பணிக்கு தலா ரூ.6,500, குக் கம் கேர் டேக்டர், மல்டிபர்பஸ், ஹாஸ்பிட்டல் வொர்க்கர் பணிக்கு தலா ரூ.5 ஆயிரம், டிரைவர் (எம்எம்யூ) பணிக்கு Collector wages முறையில் சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு மையம் (District Health Society) 38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், நீலகிரி மாவட்டம் என்ற முவகரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் இந்த முகவரிக்கு விண்ணப்பங்களை நேரில் அல்லது ஸ்பீட் போஸ்ட் இமெயிலில் ([email protected]) 10.7.2023ம் ஆண்டு மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications