2026ல் சூப்பர் வாய்ப்பு.. கை நிறைய சம்பளம்! திருச்சி NIT வேலை! எப்படி விண்ணப்பிப்பது! முழு விபரம்!
திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்பக் கழகமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NIT Trichy) தற்போது 2026ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம், குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளில் காலியாக உள்ள 18 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி என்.ஐ.டி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உயரிய கல்வி நிறுவனம். இங்கு பணிபுரிவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. இந்நிலையில், ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட் மற்றும் சூப்பிரண்டெண்ட் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அடிப்படை கணினி அறிவு அவசியமாகும். மேலும், தட்டச்சு திறன் அல்லது சுருக்கெழுத்து திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக நிர்வாக பணிகளுக்கு தேவையான அடிப்படை அனுபவம் உள்ளவர்களும் இந்த பணிகளுக்கு பொருத்தமானவர்களாக கருதப்படுவார்கள். இந்த பணிகளுக்கான வயது வரம்பு தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சீனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சூப்பிரண்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், மத்திய அரசு விதிமுறைகளின் படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான தேர்வு நடைமுறை பல கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டமாக, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர் ஸ்கிரீனிங் தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைமுறை முழுவதும் நியாயமான முறையில் நடைபெறும் என என்.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்புக்கு ஆர்வமுள்ளவர்கள், திருச்சி என்.ஐ.டி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nitt.edu என்ற இணைய முகவரியில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கல்வித் தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 2026 ஜனவரி 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தகுதியுள்ளவர்கள் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications