இனி Work From Home கிடையாது.. அறிவித்த கார்ப்பரேட்டுக்கு ஊழியர்கள் வைத்த ஆப்பு.. 600 பேர் ராஜினாமா
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை மறுத்து வாரத்தில் 5 நாள் கட்டாயம் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டது. இதனை முறைப்படி பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் பணி நீக்க சம்பளத்தை பெற்று கொண்டு வேலையை விட்டு நிற்கலாம் என்று கூறியது. இதனால் கோபமான ஊழியர்கள் 600 பேர் தங்களின் பணியை ராஜினாமா செய்து, பணி நீக்க சம்பளத்தை பெற தயாராகி இருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் (Paramount Skydance) என்ற கார்ப்பரேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு அமெரிக்கா மல்டிநேஷனல் மாஸ் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் திரைப்படம், மியூசிக், டிவி நிகழ்ச்சி, வெப் போர்ட்டல் உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓவாக டேவிட் எல்லிசன் என்பவர் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ‛வொர்க் ப்ரம் ஹோம்' ஆப்ஷன் உள்ளது. இதனால் ஊழியர்களில் ஒரு தரப்பினர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஏதாவது முக்கிய மீட்டிங் என்றால் மட்டுமே அலுவலகம் வருவார்கள். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் அலுவலகம் வந்து பணியாற்றி வருகின்றனர். இன்னொரு தரப்பினர் அவ்வப்போது அலுவலகம் வந்தும், அவ்வப்போது வீடுகளில் இருந்தும் பணியாற்றி வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் நிறுவனத்தின் சிஇஓ டேவிட் எல்லிசன் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், நிறுவனத்தில் இனி வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன் கிடையாது. ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் 5 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு அனைத்து ஊழியர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பணி நீக்க சம்பளத்தை பெற்று கொண்டு வேலையை விட்டு நிற்கலாம் என்று உத்தரவிட்டார்.
இது வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் சிஇஒ டேவிட் எல்லிசன் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களில் ஒரு தரப்பினர் கடும் கோபத்துக்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி வேலையே வேண்டாம்.. பணி நீக்க சம்பளத்தை மட்டும் தாருங்கள் என்று பணியை தூக்கி எறிந்துள்ளனர்.
தற்போது வரை சுமார் 6000 ஊழியர்கள் வரை தங்களின பணியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பணி நீக்க சம்பளமாக 185 மில்லியன் டாலர் வரை வழங்க வேண்டி உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.18.5 கோடியாகும். இந்த புதிய நடவடிக்கைகளுக்கு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தது தான் காரணமாகும்.
அமெரிக்காவில் பாரமவுண்ட் என்ற நிறுவனமும், ஸ்கைடான்ஸ் நிறுவனமும் தனித்தனியாக செயல்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த 2 நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இப்போது பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் என்ற பெயரில் செயல்பட தொடங்கி உள்ளது. அதன்பிறகு தான் சிஇஓவாக டேவிட் எல்லிசன் நியமிக்கப்பட்டார். அவர் எடுத்த அதிரடி நடவடிக்கையில் தற்போது 600 ஊழியர்கள் வரை ராஜினாமா செய்து பணி நீக்கத்துக்கான சம்பளத்தை பெற முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications