8ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா.. ஈரோட்டில் வேலை.. அழைக்கும் சுகாதாரத்துறை.. நோ எக்ஸாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புதுஅறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:- டேடா எண்ட்ரி ஆபரேட்டர் 01, MPHW 03 பணியிடங்கள், OT டெக்னிஷியன், ரேடியோ கிராபர் 01, லேப் டெகினிஷியன் 02 என மொத்தம் 08 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

 Notification of vacancies in Tamil Nadu Health Department, 8th standard candidates can also apply

கல்வி தகுதி என்ன?: டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணிணி அறிவு அவசியம். டிப்ளமோ அல்லது எம்.எஸ் ஆபிஸ் சர்டிபிகேட் கோர்ஸ் (டைப் ரைட்டிங் தமிம்/ ஆங்கிலம்) ஆகிய கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
2. MPHW - பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம், தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
3. OT டெக்னிஷியன் - அரசு மெடிக்கல் இன்ஸ்ட்டியூஷன் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஒடி டெக்னிஷியன் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
4. ரேடியோ கிராபர்: ரேடியோ டயக்னாசிஸ் டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
5. லேப் டெக்னிஷியன்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மெடிக்கல் லேப் டெக்னாலஜி துறையில் ஒரு ஆண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாகவோ நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு-638012 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்ப படிவங்களை ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பிக்கும் பதவிக்கு தேவையான சான்றிதழ்களை சுய சான்றொப்பம் செய்த நகல்களையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

* 25.08.2023 அன்று மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

சம்பளம் எவ்வளவு?: இது முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.

*டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணி: 13,500/
*MPHW - ரூ.8,500/
*OT- டெக்னிஷியன் - ரூ.15,000/
*ரேடியோ கிராபர்- ரூ.13,300/
*லேப் டெக்னிஷியன் கிரேடு 3 - ரூ.13,300

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+