அதிக சம்பளம் தரும் டாப் 10 'ஏஐ' வேலைவாய்ப்புகள் 2024... பிளஸ் 2 படித்தவர்கள் மிஸ் பண்ணக்கூடாதவை
சென்னை: இந்த உலகத்தில் அதிக சம்பளம் தரும் டாப் ஏஐ 10 வேலைவாய்ப்புகளை பற்றி இப்போது பார்ப்போம். தொழில்நுட்பம் நவீனம் என மாறிவிட்ட இந்த உலகத்தில் முற்போக்கான பல விஷயங்கள் தினம் தோறும் அரங்கேறி வருகின்றன. இப்படி யோசிக்காமல் விட்டுவிட்டோமே என்று பலரும் சொல்லும் விஷயங்கள் இன்று நடக்கின்றன. அதனால் ஏஐயை தான் வேலையை தீர்மானிக்கின்றன..
நீங்கள் சாப்பிடும் அரிசியில் உங்கள் பெயர் எழுதி இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வாக்கியம். அதேபோல் நீங்கள் செய்யும் ஒரு வேலைக்கு பின்னாலும் ஒரு ஏஐ இருக்க போகிறது.. ஏன் உங்கள் வேலை என்ன என்பதையே ஏஐ தான் இனி தீர்மானிக்க போகிறது. இது புதிய வாக்கியம். வாக்கியம் மட்டுமல்ல.. இனி வாழ்க்கையும் இதுதான்.

கம்ப்யூட்டர் ஒரு காலத்தில் வேலைகளை பறித்தன.. அதேநேரம் பல லட்சம் பேருக்கு வேலைகளை உருவாக்கவும் செய்தன. பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு கம்ப்யூட்டர்களும் சாப்ட்வேர்களும் மிகப்பெரிய உதவியாக இருந்தன. இதனால் இதனை கற்ற தமிழ்நாட்டில் ஒரு தலைமுறையே அடியோடு பொருளாதாரா ரீதியாக மாறிவிட்டது. இந்தியாவில் லட்சத்திலும், வெளிநாடுகளில மாத சம்பளமே 10 லட்சம் வரை வாங்கும் அளவிற்கு பலர் வளர்ந்துவிட்டார்கள்.
வேலைக்கு சேர்ந்த உடனேயே 50000 ஆக இருக்கும் சம்பளம் அடுத்த 3 வருடத்தில் 70 ஆயிரம் 80 ஆயிரம் என்கிற அளவில் வளர்ந்து விட்டார்கள்.. ஆனால் கம்ப்யூட்டரையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான ஏஐ வளர்ந்துவிட்டது. இன்றைக்கு ஏஐ கற்றவர்கள் தான் இந்த சம்பளங்களை வாங்குகிறார்கள்.
இந்த உலகத்தில் அதிக சம்பளம் தரும் டாப் ஏஐ 10 வேலைவாய்ப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.
ஏஐ ஆர்டிடெக்/ என்ஜினியர் (AI Architect/Engineer)
ஏஐ ஆர்டிடெக்/ என்ஜினியர் என்பவர்கள் யார் என்றால், எப்படி கட்டிடத்தை நமது வணிக தேவைக்கு அல்லது தனிப்பட்ட தேவைக்கு வடிவமைத்து தருவார்களோ, அதுபோல் குறிப்பிட்ட வணிகத் தேவைகளுக்கு ஏற்ப ஏஐ சிஸ்டத்தையும், தீர்வுகளையும் விரும்பும் வகையில் வடிவமைத்து உருவாக்கி தருவார்கள். இவர்களுக்கு மெஷின் லேர்னிங் அல்காரிதம், ஃபுரோகிராமிங் லாங்குவேஜ் மற்றும் சாப்ட்வேர் டெவலெப்மெண்ட் வழிமுறைகள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
மெஷின் லேர்னிங் பொறியாளர் ( Machine Learning Engineer)
மெஷின் லேர்னிங் பொறியாளர்கள், மெஷின் லேர்னிங் சாம்பிள்கள் மற்றும் அதன் அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்துவார்கள். பைதான், டென்சர்ஃப்ளோ, பைடார்ச் மற்றும் அது பிற தொடர்புடையவற்றில் நிபுணத்துவம் இவர்களுக்கு இருக்க வேண்டும்.
டேட்டா விஞ்ஞானி (Data Scientist)
டேட்டா விஞ்ஞானிகள், நமக்கு தேவையான பிசினிஸ் மாடலுக்கான மிக நுட்பான அளவிற்கு டேட்டாக்களை உருவாக்குவது, அவற்றை ஆராய்ச்சி செய்து நுணுக்கமான பல்வேறு விஷயங்களை கண்டுபிடிப்பது போன்றவற்றை செய்வார்கள். இவர்களுக்கு புள்ளிவிவரத்துடன் ஆராய்வது, மெசின் லேர்னிங் நுட்பங்கள் மற்றும் டொமைன் அறிவு தேவையாகும்.
ஏஐ ஆராய்ச்சி விஞ்ஞானி (AI Research Scientist)
AI ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையின் மூலம் AI இயந்திரத்தை அதிநவீனத்திற்கு மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள். ஏஐக்கு தேவையான புதிய அல்காரிதம்களை உருவாக்குதல், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை கல்வி இதழ்கள் மற்றும் மிகப்பெரிய ஏஐ மாநாடுகளில் வெளியிடுதல் ஆகியவற்றில் பணியாற்றுவார்கள்.. சிம்பிளாக சொல்வது என்றால், மனிதனை போல் ஏஐக்கு தேவையான புதிய அறிவை வளர்க்கும் வேலையை செய்ய வேண்டியவர் ஆவார்.
ஏஐ நெறிமுறையாளர் (AI Ethicist)
ஏஐ நெறிமுறையாளர் என்பவர் யார், ஒரு கண்டிப்பான வாத்தியார் போல், ஏஐ தொழில்நுட்பகளால் கண்டபடி பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். இப்போது ஏஐ தொழில்நுட்பங்களால் இது நடக்குமா , அது நடக்குமா என்று கவலைப்படுவதை தடுக்க வேண்டியவர்... தற்போது ஏஐயின் நெறிமுறை தாக்கங்கள் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகிறது, AI இப்படித்தான் வேலை செய்ய வேண்டும்.. இப்படிப்பட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏஐயை பொறுப்பான அதேநேரத்தில் பிசினஸ்க்கு தேவையானவற்றுடன் உருவாவதை உறுதி செய்பவர்.
AI தயாரிப்பு மேலாளர்கள் ( AI product manager)
AI தயாரிப்பு மேலாளர்கள் AI எப்படி இயங்க வேண்டும்.. அதில் என்ன மாதிரியான விஷயங்கள் தேவைப்படுகிறது மற்றும் ஏஐக்கு தேவையானவற்றை கண்டுபிடித்து அதன் தேவைகளை இறுதி செய்பவர்கள், என்ன மாதிரியான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வணிகத்திற்கு எப்படிப்பட்ட ஏஐ வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் குழுவாக செயல்பட்டு மேற்பார்வை செய்து பணியாற்றுவார்கள்.
AI பாதுகாப்பு நிபுணர்கள் (AI Security Specialist)
AI பாதுகாப்பு நிபுணர்கள் ஆன்லைனில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்றும் வேலைகளை செய்வார். இணையவழி தாக்குதல்களில் இருந்து AI அமைப்புகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார். கிட்டத்தட்ட உருவாக்கப்பட்ட ஒரு வீட்டை காப்பாற்றும் போலீஸ் போல் செயல்பட வேண்டும். என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் ஹேக்கர்கள் மற்றும் மால்வேர்களால் வரும். என்பதை அறிந்து அபாயங்களை மதிப்பிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அத்துடன் AI அல்காரிதம்கள் மற்றும் சாம்பிள்களில் உள்ள பாதிப்புகளில் குறைகளை கண்டுபிடித்து அவற்றை சரி செய்ய வேண்டும்.
என்எல்பி பொறியாளர்கள் (Natural Language Processing (NLP) Engineer)
என்எல்பி பொறியாளர்கள் மனித மொழியை ஏஐ புரிந்துகொள்ளவும் செயலாக்கவு உதவும் வேலைகளை செய்வார்கள். மேலும் மொழிகளை புரிந்து கொள்ளும் அமைப்பினை ஏஐக்கு உருவாக்குகின்றனர். பேச்சு மொழி , உணர்வுகளை ஆராய்வது, இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் சாட்போட் மேம்பாடு போன்ற பணிகளை செய்வார்கள்
கணினி பார்வை பொறியாளர்கள் (Computer Vision Engineer)
கணினி பார்வை பொறியாளர்கள் ஏஐக்கள் நிஜ உலகில் இருக்கும் வீடியோ காட்சிகளை புரிந்துகொள்ளவும், அதனை ஆராயவும் உதவுகிறார்கள் உருவாக்குகின்றனர். படங்களை அறிதல், பொருள் கண்டறிதல், முக அங்கீகாரத்தை அறிய வைத்தல் மற்றும் தானாக வாகனங்களை இயங்க வைக்க உதவுவது போன்ற வேலைகளை செய்வார்கள்.
ஏஐ ஆலோசகர் (AI Consultant)
ஏஐ தொழில்நுட்பங்களை தங்கள் தொழிலில் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு ஏஐ ஆலோசகர்கள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை தருவார்கள். எந்த மாதிரியா ஏஐ அவர்களுக்கு தேவை என்பதை, தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு அடையாளம் காணவும், அவர்களுக்கு தேவையான ஏஐ உத்திகளை உருவாக்கவும், அவர்களின் பிசினஸ் மதிப்பை உயர்த்தும் ஏஐ தீர்வுகளை செயல்படுத்தவும் உதவுவார்கள்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications