மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 114 காலியிடங்கள்! கை நிறைய சம்பளம்.. ரெடியா இருக்கீங்களா
சென்னை: மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவமனமான இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உதவியாளர், பயிற்சி பணியாளர் என மொத்தம் 114 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 35 ஆயிரம் வரை வழங்கப்படும்.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அணுசக்தி கழகம் மகாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயலப்டுகிறது. மகராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அணுசக்தி கழகத்தின் கீழ் நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணு சக்தி துறையின் கீழ் அணுசக்தி கழகம் செயல்படுகிறது.

நம் நாட்டில் கூடங்குளம், கல்பாக்கம், தராபூர் (மகராஷ்டிரா) உள்ளிட்ட 7 இடங்களில் அணு மின் நிலையங்கள் உள்ளன. இதில் தாராப்பூரில் அணு மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அணுசக்தி கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* அறிவியல் உதவியாளர் (Civil) - 02
* பயிற்சிப் பணியாளர் (அறிவியல்) - 12
* பயிற்சிப் பணியாளர் (தொழில்நுட்ப வல்லுநர்) - 83
* எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் - 02
* உதவியாளர் Grade-I -15 என மொத்தம் 114- காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
* கல்வித் தகுதியானது பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்.
* அறிவியல் உதவியாளர் (சிவில்) பணிக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். * அறிவியல் உதவியாளர் (பயிற்சி) பணிக்கு டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* டெக்னிஷியன் பணிக்கு பத்தாம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* 50 சதவீத மதிப்பெண்களில் தேர்ச்சி அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். அதேபோல, அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* அறிவியல் உதவியாளர் பணிக்கு ரூ.35,400 வழங்கப்படும்.
* டெக்னிஷியன் டிரெய்னி பணிக்கு ரூ.21,700 வழங்கப்படும்.
* உதவியாளர் பணிக்கு ரூ.25,500 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை படித்து தேவையான கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளவும். விண்னப்பிக்க பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.npcilcareers.co.in/TMS2026/documents/advt.pdf
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications