அரசு மருத்துவமனைகளில் 4,724 நர்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 4,727 நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வு குழுமம், தமிழ்நாடு, மருத்துவம் மற்றும் ஊர்கா சுகாதார பணிகள் இயக்குநர்- மருத்துவம் & கல்வி ஆராய்ச்சி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரின் கீழ் உள்ள மருத்துவமனைக்ளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்காக தற்காலிக செவிலியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* பதவியின் பெயர்: ஸ்டாப் நர்ஸ்
* பணியிடங்கள்: 4,724
கல்வித் தகுதி:
செவிலியர் பட்டய படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (bsc nursing) முடித்து இருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து இருப்பது கட்டாயம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலர்/ செயற் செயலாளர் (செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டம் தவிர) மாவட்ட சுகாதார அலுவலகம்/ சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம்.
இதர விவரங்கள்:
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. விண்ணப்ப படிவம் /மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் தேசிய நலவாழ்வு குழுமம் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 25.09.2026 என்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
