அரசு வேலை வேண்டுமா.. டிரைவிங் + 8 ஆம் வகுப்பு தகுதி.. மாதம் ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்.. நேரடி நியமனம்
சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர்களே நிரப்பிக் கொள்வதற்கான அனுமதிக் கடிதத்தை, 36 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் கடந்த வாரம் அனுப்பி வைத்ததார். அதன்படி காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தின் வலங்கை மான் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (03 பணியிடங்கள் ) மற்றும் ஜீப் (01) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் ஆகிய இரு பணியிடங்களுக்குமே 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதுமானது. ஜீப் டிரைவர் பணிக்கு எல்.எம்.வி டிரைவிங் உரிமம் மற்று First aid batch உடன் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு: 01. 07. 2023 தேதிப்படி பொது பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 - வயது பூர்த்தி அடைந்தும் 34- வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆதி திராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில்) 18 வயது பூர்த்தி அடைந்தும் 37 - வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு: அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 - 50,000 வரை சம்பளமாக வழங்கப்படும். ஜீப் டிரைவர் பணிக்கு ரூ.19,500- 62,000 - வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: திருவாரூர் மாவட்ட இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 27.10.2023 க்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். நேரிலோ தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் கல்வி தகுதி, அனுபவ சான்று உள்பட தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். இது குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
அறை எண் 60, மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு)
மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர்.
வலங்கை மான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் சமர்பிக்கவும் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் அதே வட்டாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பார்க்க இந்த இணையதள முகவரியை கிளிக் https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/10/2023100560.pdf செய்யவும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications