ரெடியா? 8 ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.. மாத சம்பளம் ரூ.50,000..கும்பகோணம் அரசு கவின் கல்லூரி வேலை!
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலை கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8 ம்வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கலை பண்பாட்டு துறையின் அரசு கவின் கலை கல்லூரி உள்ளது. தமிழகக் கலைமரபினை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அரசு கவின் கலை கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எத்தனை?
தமிழ்நாட்டில் கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டது. அதன்படி சென்னை, கும்பகோணம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 15 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனை நிரப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி -மாத சம்பளம் என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15,700 சம்பளமாக கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 37 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கிடப்பட உள்ளது. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://thanjavur.nic.in எனும் இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் இணைத்து ‛‛முதல்வர் (பொ), அரசு கவின் கலைக்கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002'' என்ற முகவரிக்கு மார்ச் 15 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications