இரவோடு இரவாக.. பெரிய முடிவு! ரெடியா இருங்க.. அரசு ஊழியர்களுக்கு இதை விட பெரிய நல்ல செய்தி இருக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க இருக்கும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு நல்ல செய்தி செல்ல உள்ளதாம். 2024 பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள முக்கியமான ஒரு மாற்றம் தொடர்பான பரிந்துரை நிதி அமைச்சகத்திற்கு சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2024ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டில் புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாற்றம் என்பது சாதாரண மாற்றம் கிடையாது.. அது பல லட்சம் ஊழியர்களின் பல வருட கோரிக்கை.. தற்போது நிறைவேறி உள்ளது என்கிறது அரசு ஊழியர்கள் தரப்பு.

jobs job old pension scheme pension

பழைய ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ரத்து செய்தனர். ஏப்ரல் 2004 க்குப் பிறகு அந்தந்தப் பணியில் சேர்ந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ளனர். அப்போதிருந்து, பழைய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. 2004 ஆம் ஆண்டுக்கு முன் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளதால், அவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பழைய முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளது. ஆனால், இப்போது தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக தர உத்தரவாதம் அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது கடைசி மாதம் நீங்கள் உங்கள் பணியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால்.. உங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இது பழைய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு முறையாகும். அதை புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வர உள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2024ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டில் புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

பென்ஷன் மாற்றம்: பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை சில மாற்றங்களுடன் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள். புதிய பென்சன் திட்டத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்: இதில் முக்கியமான வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆனால் இதை இன்னும் தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

புதிய பென்சன்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

மார்க்கெட் லிங்க் பென்சன்: இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். இந்த வருடம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெற முடியாமல் ஏற்பட்ட தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.

இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+