ஒரே வருஷத்தில் செட்டில் ஆகிடலாம்.. ஓமன் நாட்டில் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க மக்களே!
சென்னை: ஓமன் நாட்டில் மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் ரூ.40,000/ வரை ஊதியத்துடன் ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Final Inspection) மற்றும் Electrical Maintenance Quality/ பணிக்கு தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.
போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.

வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில், ஓமன் நாட்டில் மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் ரூ.40,000/ வரை ஊதியத்துடன் ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Final Inspection) மற்றும் Electrical Maintenance Quality/ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Final Inspection) மற்றும் Electrical Maintenance Quality/தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
ஓமன் நாட்டில் பணிபுரிய Diploma in Mechanical Engineer/ ITI தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 26 வயதிற்கு Production (Exposure in Melting/Moulding/Process Control) Quality Inspector (Exposure in Quality/ Final Inspection) Electrical Maintenance பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் ரூ.40,000/ வரை ஊதியமாக வழங்கப்படும்.
உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்த நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் បំ (Resume, Passport Original & Copy) Aadhaar Copy & Photo ஆகியவற்றை 15.08.2025க்குள் அனுப்பவும்.
முகவரி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32 கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications