Oracle வேலைவாய்ப்பு.. டிகிரி - இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஆரக்கள் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
Oracle.. அமெரிக்காவின் டெக்சாஸை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மல்டிநேஷனல் கம்ப்யூட்டர் கம்பெனி. இந்த நிறுவனம் என்பது டே்டாபேஸ் சாப்ட்வேர் (குறிப்பாக ஆரக்கள் டேட்டாபேஸ்), க்ளைட் கம்ப்யூட்டிங் உள்பட சாப்ட்வேர் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஆரக்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
Oracle நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் (Associate Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் டிகிரி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் என்றால் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சாப்ட்வேர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
மேலும் எஸ்க்யூஎல் (SQL), பிஎல் - எஸ்க்யூஎல் (PL-SQL), டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ்,தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிசினஸ் இன்டெலிஜென்ஸ் டூல்ஸ்களான Tableau, Business Object,Power Insight, DA 2 தெரிந்திருக்க வேண்டும். டேட்டா அனலிசிஸ்,டேட்டா ப்ராசசிங், மை எஸ்க்யூஎல், புரோகிராமிங், எஸ்க்யூஎல் (Structured Query Language), சாப்ட்வேர் இன்ஜினியரிங் உள்ளிட்டவை Required Skills ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் படித்து முடித்து மேற்கூறிய திறமை உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள Oracle நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம்.சம்பளம் பற்றிய விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Oracle இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications