‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் தனித்தனி சம்பளம்.. அழைக்கும் பிரபலம் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலமான OUTSCAL நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

தற்போது பலரும் ஆன்லைனில் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அவுட்ஸ்கல் (OUTSCAL) என்ற நிறுவனம் கேம் டெவலப்பர்களுக்காகவே செயல்பட்டு வருகிறது.

job jobs career careers

இதன் முக்கிய நோக்கம் என்பது கேமிங் துறையில் திறமைகளை உருவாக்கி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது தான். இந்நிலையில் தான் அவுட்ஸ்கல்லில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி OUTSCAL நிறுவனத்தில் கேம் டெவலப்பர் (Game Developer) பிரிவில் மென்டர் (Mentor) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.விண்ணப்பம் செய்வோர் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் சி ++, டேட்டா ஸ்ட்ரக்ச்சர் (Data Structure), யூனிட்டி (Unity), சி# உள்ளிட்ட ஏதேனும் டெக் ஸ்டாக்கில் solid game development அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். coding Boot Camp மற்றும் கல்லூரியில் பயிற்றுவிக்க கூடிய திறன் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் யூடியூப்பில் கல்வி தொடர்பான கன்டென்ட்டுகளை உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

டீச்சிங் மற்றும் மென்டார்ஷிப் செய்த அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்டாகும். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சம்பளம் என்பது பணியாற்றும் ஒவ்வொரு மணிநேரத்துக்கு கணக்கீட்டு வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் 6 மாதம் வரை பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு தேவை என்றால் பணி நீட்டிப்பு செய்யப்படும்.

பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே OUTSCAL நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+