"Work From Home".. ‛வீடியோ கேம்ஸ்’ விளையாட தெரியுமா? ரூ.25 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் Outscal
சென்னை: பிரபல கேமிங் நிறுவனமான அவுட்ஸ்கேல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வீடியோ கேமிங் விளையாட தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவதுடன் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
அவுட்ஸ்கேல் (Outscal).. இந்த நிறுவனம் என்பது கேம் டெவலப்பர்களுக்காக செயல்பட்டு வருகிறது. கேமிங் துறையில் திறமையாளர்களை உருவாக்கி புதிய வேலைவாய்ப்புகளை தருவது தான் இந்த நிறுவனத்தின் பணியாகும்.

இந்நிலையில் தான் அவுட்ஸ்கேல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி OUTSCAL நிறுவனத்தில் கேம் டெஸ்ட்டர் (Game Tester - QA All Levels) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். குறிப்பாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி புராஜெக்ட் மேனேஜ்மென்ட் மெத்தட்ஸ்களான Waterfall, Agile, DevOps மற்றும் Continuous Delivery உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் Solid Grasp of Project Management மற்றும் Bug Tracking தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர கேம் இன்ஜின்கள் பற்றி புரிந்து வைத்திருக்க வேண்டும்.
Amazon ஐடி நிறுவனத்தின் புதிய வேலைவாப்பு.. சென்னையில் தான் பணி.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
இந்த பணிக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் பிஎஃப் வசதி உள்ளது. ரிமோட் வொர்க் வசதி உள்ளது. இதனால் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற முடியும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த விண்ணப்பம் முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே OUTSCAL நிறுவனத்தின் இணையதளம் சென்று உடனே ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications