மிஸ் பண்ணாதீங்க.. பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் அசத்தலான வேலைவாய்ப்பு! ரெடியா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசியர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழனி கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாக இது செயல்பட்டு வருகிறது.

Palani Arulmigu Palaniandavar College of Arts and Culture recruitment 2023 for Assistant Professor

இந்த கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி எக்கனாமிக், இந்தியன் கல்சர், காமர்ஸ், Zoology பிரிவுக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் உதவி பேராசிரியர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் பேக்லாக் பிரிவில் ஆங்கிலத்துக்கு 3 பேர், வரலாறு, இந்தியன் கல்சர், காமர்ஸ், இயற்பியல் துறைகளுக்கு தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் உதவி பேராசியர்களாக தேர்வு செய்யபப்ட உள்ளனர்.

Palani Arulmigu Palaniandavar College of Arts and Culture recruitment 2023 for Assistant Professor

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்துள்ள படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் குறிப்பிட்ட துறையில் NET, SLET, SET படிப்பை முடித்தவர்களுக்கம், பிஎச்டி முடித்தவர்களுக்கும் விண்ணப்பம் செய்து பயன்பெற முடியும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அதன்படி பணிக்கான விண்ணப்பத்தை தயார் செய்து அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், அனுபவ சான்று உள்ளிட்டவற்றின் நகல்களை இணைத்து ‛‛The Secretary Arulmigu Palniandavar College of Arts and Culture, Palani - 624 601, Dindigul District'' எனும் முகவரிக்கு அக்டோபர் மாதம் 9 ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்க்காணலில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+