மத்திய அரசில் நிரந்தர வேலை..அதுவும் மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: மத்திய வருவாய் மற்றும் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சமையல்காரர் மற்றும் சமையல்காரர் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கஸ்டம்ஸ் எனப்படும் சுங்கத்துறை, மத்திய அரசின் முக்கியமான துறைகளில் ஒன்றாகும். விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக மையங்களில் சுங்கவரி கண்காணிப்பு, வரி வசூல், சட்டவிரோத கடத்தல் தடுப்பு போன்ற முக்கிய பணிகளை இந்த துறை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் தற்போது சமையல்காரர் தொடர்பான பணியிடங்கள் காலியாக இருப்பதால், அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, "ஹல்வாய் கம் குக்" என்ற சமையல்காரர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், கேட்டரிங் அல்லது சமையல் தொடர்பான டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தது இரண்டு ஆண்டுகள் சமையல்காரராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், "அசிஸ்டன்ட் ஹல்வாய் கம் குக்" எனப்படும் சமையல்காரர் உதவியாளர் பணிக்கும் ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணிக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ அவசியம். அதோடு, குறைந்தது ஒரு ஆண்டு பணியனுபவம் இருந்தால் போதும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது, 31.12.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் முதலில் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் திறன் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏ4 அளவிலான வெள்ளைத் தாளில் விண்ணப்பத்தை தயார் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, "THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT) OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS (GENERAL) CUSTOM HOUSE, NO. 60, RAJAJI SALAI, CHENNAI - 600 001" என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிரந்தர வேலை, நல்ல சம்பளம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கும் சமையல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் கடைசி நாளை தவற விடாமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2025/11/NOTIFICATION-1.pdf என்ற இணைய முகவரியில் இணையலாம்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. நாளை இண்டர்வியூ -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications