மிஸ் பண்ணாதீங்க.. Phonepe நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலை..நல்ல சான்ஸ்.. கைநிறைய சம்பளம்
சென்னை: இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கான பல்வேறு செல்போன் செயலிகளில் போன்பே-வும் ஒன்று. இந்நிலையில் தான் போன்பே நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது அனைவரும் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்து வருகிறோம். இதில் பலரும் பிரத்யேக செல்போன் செயலிகளை பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஜிபே, போன்பே உள்பட பல்வேறு செயலிகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இதில் போன்பே செல்போன் செயலியை இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 3.7 கோடி பேர் வணிகர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் போன்பே நிறுவனத்தில் காலியாக உள்ள சாப்ட்வேர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது போன்பே செல்போன் செயலியின் தலைமை அலுவலகம் பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூர் பெல்லந்தூரில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் உள்ள காலியிடங்கள் தான் தற்போது நிரப்பப்பட இருக்கிறது. அதன்படி போன்பே நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணியை விரும்புவோர் குறைந்தபட்சம் IOS மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பிங், ரிலீசிங், மெயின்டெனன்ஸ் பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Swift-ல் Code எழுத தெரிந்திருக்க வேண்டும். IOS SDK ப்ரேம்வொர்க்ஸ் மற்றும் ஃபண்டமென்டல்ஸில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர கம்ப்யூட்டர் அறிவை நன்கு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி புதிய விஷயங்களை வேகமாக கற்று கொள்ளும் திறன் இருக்க வேண்டும்.
இது ஒரு முழுநேர பணியாகும். தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் எவ்வளவு என்பது தெரியவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையை பார்த்து கைநிறைய சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர இன்சூரன்ஸ், பிஃஎப், உயர் கல்வி பயில்வதற்கான உதவி, கார் வாடகை, சம்பளத்தை முன்கூட்டியே வாங்கி கொள்வது உள்பட பல வசதிகள் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.
இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்துக்கான தேதி என்ன? என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications