மாதம் ரூ.69,000 ஊதியம்.. தபால் துறையில் 60,544 பணிகள்.. 10, 12 முடித்தாலே போதும்.. சூப்பர் வாய்ப்பு
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் மொத்தம் 60,544 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து மாத சம்பளமாக ரூ.69,100 வரை பெற முடியும்.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால்(அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவ்வாறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பின் பல்வேறு முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தபால் துறையில் மொத்தம் 60,544 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் 2 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி போஸ்ட்மேன் (Postman) பணிக்கு 59,099 பேரும், மெயில்கார்ட் (Mail Guard) பணிக்கு 1,445 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆண், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பம் செய்வோரின் குறைந்தபட்ச வயது என்பது 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்களுக்கு வயது சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி-சம்பளம் என்ன?
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.21,700 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 14 (14.12.2022) கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications