பவர் கிரிட் நிறுவனத்தில் மாதம் 74 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. ஐடிஐ, டிப்ளமோ, பிஇ தகுதிதான்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் (PowerGrid Job) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 660 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை குறைந்தது ரூ.21,500 முதல் ரூ.74,000 வரை வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.

PowerGrid Job job employment

பணியிடங்கள் விவரம்:

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமாக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID) உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தில், டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி, ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி உள்பட 660 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

* டிப்ளமோ டிரெய்னி (எலெக்ட்ரிக்கல்) (DTE)
* டிப்ளமோ டிரெய்னி (சிவில்) (DTC)
* டிப்ளமோ டிரெய்னி (சர்வே) (DTS)
* ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (HR) (JOT - HR)
* ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (F&A) (JOT - F&A)
* ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி (சர்வே) (JTT - Survey) என பல்வேறு பிரிவுகளில் 660 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி:

ஐடிஐ, டிப்ளோமா, பி.இ/பி.டெக், பி.பி.ஏ / பி.பி.எம் / பி.பி.எஸ், சி.ஏ / சி.எம்.ஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும்.

DTE (எலெக்ட்ரிக்கல்) பதவிக்கு: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம்/நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் (பவர்), எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அல்லது பவர் இன்ஜினியரிங் (எலெக்ட்ரிக்கல்) துறைகளில் மூன்று வருட முழுநேர டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். பொது / OBC (NCL) / EWS பிரிவினருக்கு குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களும், SC / ST / PwBD பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களும் தேவை. பி.டெக்/பி.இ/எம்.டெக்/எம்.இ போன்ற உயர் தொழில்நுட்பப் பட்டங்கள் அனுமதிக்கப்படாது.

DTC (சிவில்) பதவிக்கு: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம்/நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். பொது / OBC (NCL) / EWS பிரிவினர் 70% மதிப்பெண்களும், SC / ST / PwBD பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பி.டெக்/பி.இ/எம்.டெக்/எம்.இ போன்ற உயர் தொழில்நுட்பப் பட்டங்கள் அனுமதிக்கப்படாது. கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

வயது வரம்பு (11.05.2026 நிலவரப்படி):

DTE, DTC, DTS, JOT (HR), JOT (F&A) மற்றும் JTT (Survey) ஆகிய அனைத்துப் பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள் ஆகும். SC/ST பிரிவினருக்கு +5 ஆண்டுகள், OBC (NCL) பிரிவினருக்கு +3 ஆண்டுகள். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு பொதுப் பிரிவில் +10 ஆண்டுகள், OBC (NCL) பிரிவில் +13 ஆண்டுகள், SC/ST பிரிவில் +15 ஆண்டுகள் வயது வரம்பிள் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு:

அனைத்து டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி, ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி பதவிகளுக்கும் ஆரம்ப சம்பளமாக ரூ.21, 500 முதல் ரூ.74,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு, அதைத் தொடர்ந்து கணினி திறன் தேர்வு / தொழிற் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

DTE/DTC/DTS/JOT (HR)/JOT (F&A) பதவிகளுக்கு: SC/ST/Ex-s/PwD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹300/- (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்). JTT (சர்வே) பதவிக்கு: SC/ST/Ex-s/PwD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹200/- (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், பவர் கிரிட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.powergrid.in/ இல் வழங்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் 20 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 11.05.2026 ஆகும்.

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.powergrid.in/sites/default/files/job_opportunities_document/Detailed%20Advertisement%20-%20Non%20Executive%20Posts%202026.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+