Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8வது படிச்சிருந்தாலே போதும்.. தனியாரில் வேலை! சென்னையில் அரசு நடத்தும் முகாம் - காசு ஏதும் வேணாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு நடத்தும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம் என வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

Private companies employment camp to be conducted by Tamilnadu government at friday in Chennai

இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 23.06.2023 (வெள்ளிக் கிழமை) அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன, இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்." என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+