‛‛அனுபவம் வேண்டாம்’’.. சென்னையிலேயே ஐடி வேலை.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. ரெடியா?
சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபரலமான ஐடி நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ப்ரோபல் (Propel). இந்த நிறுவனத்தில் அவ்வப்போது காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி உள்பட பிற விபரங்கள் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி குவாலிட்டி இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தொடர்புடைய துறையில் பூஜ்ஜியம் முதல் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் சாப்ட்வேர் சர்வீஸ் பிரிவில் குவாலிட்டி இன்ஜினியராக 2 ஆண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டிருந்தால் கூடுதல் சிறப்பு. மாறாக பணி அனுபவம் இன்றி வேலைக்கான திறமை கொண்டிருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான திறமையை பொறுத்தமட்டில் விண்ணப்பம் செய்வோர் மேனுமல் டெஸ்ட்டிங் டெக்னிக்ஸ் (Manual testing Techniques) (Block Box), White Box, Gray Box Testing தெரிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸ் செலினியம் (Selenium), JUnit, TestNG-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர பக்(Bug) டிராக்கிங் டூல்ஸ்களான Azure DevOps, JIRA தெரிந்திருக்க வேண்டும். மேலும் எஸ்டிஎல்சி (Software Development Lifecycle) தெரிந்திருக்க வேண்டும். பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை Propel நிறுவனத்தின் இணையதளம் சென்று சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications