பென்சன் வாங்குறீங்களா? நாடு முழுக்க ஊழியர்களுக்கு போன முக்கிய வார்னிங்.. காசெல்லாம் காலியாகிடும்
சென்னை: நாடு முழுக்க பென்சன் வாங்கும் ஓய்வூதியர்களுக்கு முக்கியமான ஒரு வார்னிங் அனுப்பப்பட்டு உள்ளது.
இக்காலத்துல டிஜிட்டல் உலகம் எவ்வளவோ வசதிகளைக் கொடுத்தாலும், அதே அளவுக்குத் திருட்டுப் பயமும் அதிகமாயிடுச்சு. குறிப்பா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களையும், வயசானவங்களையும் குறிவைச்சு புதுசு புதுசா மோசடிகள் நடக்குது. இப்போ லேட்டஸ்ட்டா "பென்ஷனர் கார்டு" (Pensioner Card) அப்படிங்கிற பேர்ல ஒரு பெரிய மோசடி பரவிக்கிட்டு இருக்கு. இதைப் பத்தி பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்திருக்காங்க. அது என்ன எச்சரிக்கை.. வாங்க பார்க்கலாம்!

இந்த மோசடி எப்படி நடக்குது?
"உங்களுக்குப் புதுசா பென்ஷனர் கார்டு வந்திருக்கு, இதை ஆக்டிவேட் பண்ண இந்த லிங்க்கை கிளிக் பண்ணுங்க" அப்படின்னு வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது எஸ்எம்எஸ் (SMS) மூலமா மெசேஜ் வரும். பாக்குறதுக்கு அப்படியே பேங்க்ல இருந்து வர்ற மாதிரியே இருக்கும். ஆனா, அதுதான் பெரிய ஆபத்து.
மோசடிக்காரங்க பெரும்பாலும் பேங்க் அதிகாரிங்க மாதிரியோ இல்ல அரசாங்க அதிகாரிங்க மாதிரியோ பேசி உங்களை நம்ப வைப்பாங்க. "உங்க பென்ஷன் விவரங்களை சரிபார்க்கணும் (Verify), இல்லைன்னா பென்ஷன் நின்னுடும்"னு பயமுறுத்தி உங்ககிட்ட இருந்து ரகசியத் தகவல்களைத் திருடுவாங்க.
சில உதாரணங்கள்:
போலி லிங்க்: "புதிய பென்ஷனர் கார்டு பெற இங்கே கிளிக் செய்யவும்"னு ஒரு லிங்க் வரும். அதைத் தொட்டாலே உங்க போன் அவங்க கட்டுப்பாட்டுக்குப் போக வாய்ப்பிருக்கு.
OTP கேட்பது: "உங்க கார்டு ரெடி, அதை கன்ஃபார்ம் பண்ண உங்க போனுக்கு வர்ற 6 இலக்க நம்பரை (OTP) சொல்லுங்க"ன்னு கேப்பாங்க.
ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸ்: "உங்க போன்ல இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க, நாங்களே உங்களுக்கு கார்டு அப்ளை பண்ணித் தர்றோம்"னு சொல்லி AnyDesk அல்லது TeamViewer போன்ற ஆப்ஸ்களை இன்ஸ்டால் பண்ணச் சொல்லுவாங்க. இதைச் செஞ்சா உங்க பேங்க் பேலன்ஸ் மொத்தத்தையும் அவங்க எடுத்துடுவாங்க.
பேங்க் ஆஃப் பரோடா சொல்வது என்ன?
பேங்க் ஆஃப் பரோடா ரொம்பத் தெளிவா சொல்லிட்டாங்க: "நாங்க சோஷியல் மீடியா மூலமாவோ இல்ல வாட்ஸ்அப் லிங்க் மூலமாவோ எந்த புது கார்டும் தரல."
பேங்க்ல இருந்து யாருமே போன் பண்ணி உங்க OTP, பின் (PIN), CVV நம்பர், அல்லது ஆதார்/பான் கார்டு விவரங்களைக் கேட்க மாட்டாங்க. சமீபத்துல கூட "8-வது ஊதியக் குழு" (8th Pay Commission) அப்டேட் அப்படின்னு சொல்லி ஒரு போலி ஃபைலை பரப்பி ஏமாத்தப் பாத்தாங்க. அதனால ரொம்ப கவனமா இருக்கணும்.
தப்பிக்க என்ன பண்ணணும்?
தெரியாத லிங்க்கை தொடாதீங்க: வாட்ஸ்அப்ல வர்ற கவர்ச்சிகரமான மெசேஜ்களை நம்பி எந்த லிங்க்கையும் கிளிக் பண்ணாதீங்க.
OTP-யை யாருக்கும் சொல்லாதீங்க: உங்க பிள்ளைங்ககிட்ட கூட சொல்லாதீங்கன்னு பேங்க் சொல்லுது. அது உங்க பணத்தை திருடும் எளிய முறை.
நேரடியா பேங்குக்கு போங்க: ஏதாச்சும் சந்தேகம்னா, போன்ல பேசுறதை விட நேரா உங்க பேங்க் கிளைக்கு (Branch) போய் விசாரிங்க. இல்லை என்றால் அதிகாரபூர்வ ஹெல்ப்லைன் எண்ணுக்கு கால் பண்ணுங்க.
வீட்டுல இருக்கிறவங்க கவனத்துக்கு: உங்க வீட்டுல பெரியவங்க இருந்தா, அவங்ககிட்ட இதைப் பத்தி எடுத்துச் சொல்லுங்க. அவங்க கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் திருடு போகாம இருக்க இது ரொம்ப அவசியம்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications