நல்ல சம்பளம்.. டிகிரி, டிப்ளமோ முடித்தாலே போதும்! புதுச்சேரி DHFWS-ல் நர்சிங் ஆபிசர் வேலைவாய்ப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டிஎச்எப்டபிள்யூஎஸ்-ல் காலியாக உள்ள நர்சிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோவில் நர்சிங் படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் டிஎச்எப்டபிள்யூஎஸ் எனும் (Directorate of Health and Family Wefare Services or DHFWS) சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள நர்சிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்துக்கு தமிழ் தெரிந்த 95 பேர், மாஹி பிராந்தியத்துக்கு மலையாளம் தெரிந்த 9 பேர், யானம் பிராந்தியத்தில் தெலுங்கு தெரிந்த ஒருவர் என மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து டிகிரி அல்லது டிப்ளமோ பிரிவில் ஜெனரல் நர்சிங் அன்ட் மில்வைப்ரி/சைக்காஸ்டிக் நர்சிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து மத்திய நர்ஸாக பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 28.10.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி, எம்பிசி, பிசிஎம், இபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது புதுச்சேரியில் 5 ஆண்டுகளாக வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 28.10.2023 தேதிக்குள் https://recruitment.py.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மேலும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து சுயஒப்பமிட்டு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பதிவுத்தபாலின் மேல் Application For Recruitment To The Post Of Nursing Officer என எழுதி 6.11.2023ம் தேதி மாலை 5.45 மணிக்குள் The Director, Directorate of Health & Family Welfare Services, Victor Simmonel Street, Old Maternity Hospital Building, Puducherry - 605001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகங்கள் இருப்பின் வேலை நாட்களில் 0413 - 2229355, 2339350 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பணி குறித்த கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications