ரெடியா? கைநிறைய சம்பளம்.. 12ம் வகுப்பு முடித்தாலே போதும்.. புதுச்சேரி ஐசிஎம்சிஆர்ஐ-யில் அரசு வேலை!
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 1,225 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணியை எளிமையாக பெற முடியும்.
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஐஜிஎம்சிஆர்ஐ) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் 1,225 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி மல்டிபர்பஸ் வொர்க்கர்(Multipurpose Worker) பணிக்கு 225 பேர், மல்டிபர்பஸ் வொர்க்கர் (Multipurpose Worker- Group C) பணிக்கு 1000 பேர் என மொத்தம் 1,225 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.20,200 வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 12ம் தேதிக்குள் igmcri.edu.in இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
மல்டிபர்பஸ் வொர்க்கர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
மல்டிபர்பஸ் வொர்க்கர் குரூப் சி பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications